Asianet News TamilAsianet News Tamil

உனக்கென்ன ஜெயலலிதான்னு நினைப்பா மனசுக்குள்ள? தினகரனை திட்டித் தீர்த்த சசிகலா!!

மறுப்பதற்கில்லை! டி.டி.வி.தினகரனுக்கு தமிழகத்தில் கணிசமான சதவீதத்தில் மக்கள் செல்வாக்கு இருக்கிறதுதான். அ.தி.மு.க.வினர் என்ன, ‘இனி இந்த கட்சி தேறாது!’ என்று கடுப்பில் இருக்கும் தி.மு.க.வினர் கூட அ.ம.மு.க. பக்கம் தாவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Sasikala angry in ttv Dinakaran
Author
Chennai, First Published Oct 19, 2018, 10:31 AM IST

மறுப்பதற்கில்லை! டி.டி.வி.தினகரனுக்கு தமிழகத்தில் கணிசமான சதவீதத்தில் மக்கள் செல்வாக்கு இருக்கிறதுதான். அ.தி.மு.க.வினர் என்ன, ‘இனி இந்த கட்சி தேறாது!’ என்று கடுப்பில் இருக்கும் தி.மு.க.வினர் கூட அ.ம.மு.க. பக்கம் தாவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள் தனக்கான ஆதரவு கிராப் ஏறிக் கொண்டே செல்வதை கவனித்த பின் டி.டி.வி.யின் செயல்பாட்டில் மாற்றம் தெரிய துவங்கியுள்ளது! என்று அவரது கட்சி நிர்வாகிகளே கொளுத்திப் போடுகின்றனர். Sasikala angry in ttv Dinakaran

முன்பெல்லாம் எளிதாய் அவரை சந்திக்க முடிந்ததாம் கீழ் மட்ட நிர்வாகிகளாலும் கூட. ஆனால் இப்போதெல்லாம் இரண்டாம் கட்ட நிர்வாகிகளே முக்கி முணக வேண்டியுள்ளதாம் அண்ணன் தரிசனத்துக்கு. (இது பற்றி நம் ஏஸியாநெட் தமிழ் இணையதளம் முன்பேயே விரிவாக எழுதியை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப் பட்டிருக்கிறோம் மக்கழேய்ய்ய்ய்!) ஓ.கே. அது கிடக்கட்டும், விஷயத்துக்கு வருவோம். தினாவை சசி ஏன் வறுத்தெடுத்தாராம்? சமீபத்திய டி.வி. பேட்டி ஒன்றில் ‘அ.தி.மு.க.வை அ.ம.மு.க.வுடன் இணைப்பேன்’ என்று கெத்தாக கூறியிருந்தார் தினகரன். Sasikala angry in ttv Dinakaran

இந்த கருத்துக்கு அ.தி.மு.க.வின் நடு நிலையாளர்கள் கூட சகல திசைகளிலுமிருந்து தாறுமாறாக அவரை விமர்சித்துவிட்டனர். ‘அ.தி.மு.க. ஒரு பெருங்கடல், உங்கள் அமைப்போ சிறு குளம். யார் யாரோடு வந்து இணைய வேண்டும்?’ என்று கொட்டி தீர்த்தனர். அதன் பிறகுதான் தினாவும் நாக்கை கடித்துக் கொண்டார். இந்த பிரச்னை அப்படியே சசிகலாவுக்கு பார்சல் ஆனது. அது மட்டுமா பார்சல் ஆனது, கூடவே இன்னொரு பாமையும் சேர்த்துக் கட்டி அனுப்பியிருந்தார்கள். Sasikala angry in ttv Dinakaran

அதாவது அதே பேட்டியில், சசிகலாவை தங்கள் கட்சியின் பொதுச்செயலாளராக அடையாளப்படுத்தி பேசியிருந்தார் தினகரன். இதை பிடியாக பிடித்துக் கொண்ட அ.தி.மு.க.வினர், ”அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் கனவில் எப்போதும் இருக்கிறார் சசி. அதற்கு தினகரனே வேட்டு வைத்துவிட்டார். அவரது பேச்சின் படி அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளராக இருக்கிறார் சசி. பின் எப்படி அவர் எங்கள் கட்சியின் பொ.செ. தேர்தலில் போட்டியிட முடியும்? வாய்ப்பே இல்லை. தினகரனின் வார்த்தைகளை அப்படியே தேர்தல் கமிஷனிடம் வலுவான ஆதாரங்களாக சமர்ப்பிப்போம். சசியின் கனவை கலைத்த தினகரனுக்கு நன்றி.”என்கிறார்கள் நக்கலாக. Sasikala angry in ttv Dinakaran

இந்த தகவலும்தான் சசிக்கு சுடச்சுட பார்சலானது. கொதித்துவிட்டாராம் சின்னம்மா. அதன் பிறகு தன்னைப் பார்க்க வந்த, தினகரனுக்கு நெருக்கமான நபரிடம், “உங்க தலைவரு (தினகரன்) என்ன பெரிய ஜெயலலிதான்னு நினைச்சுட்டு இருக்காரா? ஒரு எம்.எல்.ஏ. சீட்டை ஜெயிச்சுட்டா புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகிட முடியுமா? செத்துக் கிடக்குற யானைக்கு உயிர்கொடுத்து எழுந்து நிற்க வைக்கிற வைத்தியமெல்லாம் அக்கா (ஜெ.,) மாதிரியான கடவுள்களுக்குதான் முடியும். Sasikala angry in ttv Dinakaran

இவரு என்னமோ தன்னை அந்த லெவலுக்கு நினைச்சு பேசிட்டும், நடந்துட்டும் இருக்கார். என்னய்யா பெரிய அ.ம.மு.க.? அதுக்கு நான் பொதுச்செயலாளரா? இன்னைக்கு என்னாச்சு பாருங்க, தவளை தன் வாயால கெட்டது மாதிரி ஆயிடுச்சா! எனக்கு எதுவும் தெரியாது, உங்க தலைவர் என்னவோ பண்ணி இந்த பிரச்னை தீரணும் அவ்வளவுதான்.” என்று பொங்கித் தீர்த்துவிட்டார்.

அந்த நபரும் அடுத்த பிளைட் ஏறி வந்து தினகரனை சந்தித்து இதை ஒப்புவித்துவிட்டார். சற்றே உள்ளூர நடுங்கிவிட்டாராம் தினகரன். அதன் பிறகே அ.தி.மு.க. ஆண்டுவிழாவுக்கு முந்தைய நாள் வெளியிட்ட அறிக்கையில் ‘கழகத்தை மீட்பேன், ரெட்டை இலையை மீட்பேன்.’ என்று சொல்லி, சின்னம்மாவை கூல் செய்திருக்கிறாராம். அரசியல்ல இதெல்லாம் ‘அ’சாதாரணமப்பா!

Follow Us:
Download App:
  • android
  • ios