‘அனுராதாவை ஜெயா டிவிக்கு போய் சார்ஜ் எடுத்துக்க சொல்லுங்க. விவேக்கை வீட்டில் இருக்கச் சொல்லுங்க...’ என பரப்பன ஆக்ராஹார ஜெயிலில் சத்தம் போட்டாராம். சசியின் இந்த கட்டளைக்குப் பிறகே தினகரனின் மனைவி அனுராதா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயா டிவி அலுவலகத்துக்கு வந்து விவேக்குடன் சிலநிமிடம் பேசிவிட்டு மீண்டும் ஜெயா டிவி பொறுப்பை எடுத்துள்ளார்.

இதனால் ரொம்பவே அப்செட் ஆன விவேக். இன்னும் ஜெயா டிவி அலுலவகம் பக்கம் இதுவரை போகவே இல்லையாம். எதற்காக அத்தை இந்த முடிவை எடுத்தார் என தெரியாமல் குழம்பிப் போன விவேக் இது சம்பந்தமாகப் பேசுவதற்காகத்தான் சசிகலாவைப் பார்க்க பெங்களூரு போனாராம். ஆனால், பார்க்க முடியாமல் திரும்பி வந்துவிட்டார்.

கடந்த சில சந்திப்புகளில் விவேக் பற்றி தினகரனும், தினகரனை பற்றி விவேக்கும் சசிகலாவிடம் புகார் மேல் புகார்களை அடுக்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்தான் கடைசியாக தினகரன் சசிகலாவை சந்தித்தபோது விவேக் தொடர்பாக சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். ‘ஜெயா டிவியில் துரைமுருகன் பேட்டி வருது. அம்மா இருந்தால் இப்படி அவரோட பேட்டி வந்திருக்குமா? இந்த அதிகாரத்தை விவேக்குக்கு நீங்க எப்படி கொடுத்தீங்க? டிவி பொறுப்பை அனுராதாகிட்டயே கொடுங்க என சொல்லியிருக்கிறார்.

அப்படி நீங்க பொறுப்பை கொடுக்கலன்னா நீங்க வெளியே வரும்போது டிவியும் கூட நம்ம கையை விட்டுப் போய்டும் என பேசினாராம். விவேக்கும் எல்லாம் புதுசா பண்றேன்னு இப்படி பண்ணிட்டு இருக்கிறான். அப்படி பண்றதுன்னா தனியாக ஒரு சேனல் ஆரம்பிச்சு பண்ணட்டும். இது ஜெயா டிவியா என நம்ம கட்சிக்காரங்க முகம் சுளிக்கும் அளவுக்கு செய்திகள் வருது. உடனே அவனை அந்த பொறுப்பில் இருந்து வெளியே அனுப்புங்க...’ என்று சொல்லி கேட்டிருக்கிறார். அப்போது சசிகலாவிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லையாம். காரணம்

கூடவே இளவரசியும் இருந்தாராம், சசிகலா அமைதியாக இருந்தாராம். இதனையடுத்து, கடந்த வாரம் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இடையில் நம்பிக்கையாக இருக்கும் ஒருவர் மூலமாகத்தான் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறார். ‘அனுராதாவை ஜெயா டிவிக்கு போய் சார்ஜ் எடுத்துக்க சொல்லுங்க. விவேக்கை வீட்டில் இருக்கச் சொல்லுங்க...’ என்று சசிகலா சொல்லி அனுப்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்த விஷயத்தை விவேக்கிற்கு யாரும் சொல்லவில்லையாம். அனுராதாவே நேராகச் சென்றுதான் விவேக்கிடம் சொல்லி அவரை வெளியேற்றியிருக்கிறார்.