பன்னீர்செல்வம் அதிரடியை தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும் போயஸ் கார்டன் வருமாறு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்பு ஜெயலலிதாவின் சமாதியில் முதல்வர் பன்னீர்செல்வம் 40 நிமிட மவுன அஞ்சலியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சசிகலாவையும் அமைச்சர்களையும் நேரடியாக தாக்கி தனது நீண்டநாள் குமுறலை மக்களுக்கு வெளிப்படுத்தினார்.

இவ்வளவு நாட்கள் சிலர் கட்டுப்பாட்டிலும் வற்புறுத்தலின் பெயராலும் பல நெருக்கடிகளை சந்தித்து வந்த பன்னீர்செல்வம் தற்போது மக்கள் பணிக்கு தடை விதித்தால் தடையை உடைத்தெரிவேன் என தெரிவித்தது கார்டன் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து கதிகலங்கி நிற்கும் சசிகலா வட்டாரங்கள் அமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறனர்.

போயஸ் கார்டனில் சசிகலாவுடன் அமைச்சர்களும் நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தி வருகிறனர். இதில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, காமராஜூ, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.