சொத்து குவிப்பு வழக்கில் தற்போது  தண்டனை  பெற்று வரும்  சசிகலா  பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது.

சசிகலாவை காண  இதுவரை  கடந்த மாதம் மட்டும் 14 பேர் வரை அவரை சென்று பார்த்துள்ளனர்  என்ற தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் சிறை விதியின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை வழக்கறிஞர் அல்லது உறவினர் அல்லது நண்பர் ஒருவர் மட்டுமே வந்து செல்லலாம்  என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் சசிகலாவுக்கென  தனி அறை, தியானம் செய்ய  தனி அறை, வீட்டு உணவு  என  பல சலுகைகள்  வழங்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது . உச்சநீதிமன்றம்  அனுமதியை  மறுக்கப்பட்டதையும்   மீறி,  அவருக்கு  சிறை நிர்வாகம்  பல  சலுகைகள் வழங்கியதாக தகவல்  தெரியவந்துள்ளது.

இந்த அனைத்து விவரமும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .