வர வர விஜய் படம் என்றாலே அவரது ரசிக வெறியர்கள் தாண்டி, அரசியல்வாதிகளையும் படத்தில் என்ன இருக்குமோ, ஏது இருக்குமோ! என்று கவனிக்க வைக்கிறது. 

அந்த வகையில், கருணாநிதியின் மனசாட்சியான முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறனால் தயாரிக்கப்பட்டு, இசை வெளியீட்டு விழாவையே அரசியல் மேடை போல் திட்டமிடப்பட்டு, ஸ்டாலினை உசுப்பி, கீறி, உறும வைத்த ’சர்கார்’ படத்தில், தி.மு.க.வுக்கு எதிரான காட்சிகளும், வசனங்களும் ஏகத்துக்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க.வை பெரிதாய் சீண்டாமல் அ.தி.மு.க. அரசைதான் துவைத்துள்ளனராம். 

சர்காரில் தி.மு.க.வுக்கு எதிராக என்ன இருக்கிறது!? அதற்கு உடனடியாய் எப்படி சுடச்சுட பதிலடி கொடுப்பது? என்பதற்காகவே தி.மு.க.வின் இணைய அணி, டிக்கெட் ரிசர்வ் செய்து முதல் காட்சியையை பார்த்துவிட்டது. 

ஆனால் தங்கள் கட்சியை பெரிதாய் சீண்டியிராத வகையில் சந்தோஷமே. அதேவேளையில் சில கதாபாத்திரங்கள், தி.மு.க.வினரின் புருவத்தை உயர்த்தியிருக்கிறது. 

அதாவது பழ. கருப்பையா கதாபாத்திரத்தை கருணாநிதியை மனதில் வைத்து படைத்துள்ளார்களோ? ராதாரவியின் பாத்திரம் துரைமுருகனை காட்டுகிறதோ? அப்படியானால் பழ கருப்பையாவின் மகளாக வரும் வரலெட்சுமி?...இந்த லேடியையா? அய்யகோ! அடப்பாவிகளா! என்கின்றனர். 

ஆனால் சர்கார் டீமோ.....’தேவையில்லாத கற்பனைகளை பண்ணிக்கொண்டு எங்களை வீணாக நோண்டி புண்ணாக்க முயல வேண்டாம்.’ என்கிறது.