அம்மா இல்லாததால் விஜய்க்கு குளிர்விட்டுப்போய்விட்டது... அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 8, Nov 2018, 10:33 AM IST
Sarkar movie...Minister Jayakumar
Highlights

நடிகர் விஜய் அரசியல் ரீதியாக தன்னை முன்னிலைப்படுத்துவதற்காக காழ்ப்புணர்ச்சியுடன் ‘சர்கார்’ படத்தில் நடித்திருக்கிறார். அவர் என்னதான் தலைகீழாக நின்றாலும் அவரால் ஒருக்காலமும் எம்.ஜி.ஆர் ஆகமுடியாது’ என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயக்குமார்,’’படங்களில் சொல்வதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதை விடுத்து மக்களுக்கு நல்லது செய்யும் இலவச திட்டங்களை கிண்டலடிப்பது, கோமளவள்ளி என்று அம்மாவின் பெயரை வைத்து வில்லி கேரக்டரை சித்தரித்திருப்பது என்று படம் முழுக்கவே காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

அம்மா உயிரோடிருந்தபோது இவர்கள் எங்கிருந்தார்கள். அப்போது அவர்களுக்கு இருந்திருக்கவேண்டிய வீரம் எங்கே? அம்மா இன்று உயிரோடு இல்லை என்பதால் இவர்களுக்கு குளிர்விட்டுப்போய்விட்டது. 

சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் சொன்னதுபோல் சர்கார் படம் மீதும், அவற்றை வெளியிட்ட தியேட்டர்கள் மீதும் கண்டிப்பாக நடவடிக்கை பாயும்’ என்றார் ஜெயக்குமார்.

loader