Asianet News TamilAsianet News Tamil

பிடிஆர் மீது செருப்பு வீச சொன்ன சரவணன்..? தூக்கி உள்ள வைக்கச் சொல்லி பாஜக போலீசில் புகார்..

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கார் மீது செருப்பு வீசா காரணமாக இந்த டாக்டர் சரவணனை கைது செய்ய வேண்டுமென பாஜகவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது சரவணனுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

Saravanan asked to throw sandal on PDR..? BJP complains to police asking for arrest..
Author
Chennai, First Published Aug 19, 2022, 6:42 PM IST

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கார் மீது செருப்பு வீசா காரணமாக இந்த டாக்டர் சரவணனை கைது செய்ய வேண்டுமென பாஜகவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது சரவணனுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் என்பது மக்களுக்கு சேவையாற்றுவதற்கான களம் என்ற காலம் போய், சந்தர்ப்பவாதமே சிறந்த அரசியல் என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டு வருகிறது.  இதற்கு ஏற்றார் போல் அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படுபவர்கள் ஒருவர்தான் டாக்டர் சரவணன். இவர் ஆரம்பத்தில் மதிமுகவில் இருந்தவர் ஆவார், பின்னர் வைகோவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அங்கிருந்து திமுகவுக்கு தாவினார், அங்கு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சீட் கொடுக்கவில்லை என்பதற்காக பாஜகவுக்கு வந்து ஒரே நாளில் பாஜக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர்  மதுரை பாஜக மாநகர தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

Saravanan asked to throw sandal on PDR..? BJP complains to police asking for arrest..

இதையும் படியுங்கள்: SC பசங்கனாலே பிரச்சனைதான், நீ எந்த சாதின்னு உன் மூஞ்சிலயே தெரியுது.. பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை சாதி வெறி.

கடந்த 13 ஆம் தேதி ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் விவகாரத்தில் அமைச்சருக்கும் பாஜகவுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் விமான நிலையத்தில் இருந்து வெளி வந்த நிதியமைச்சர் மீது பாஜகவினர் காலணி வீசி தாக்குதல் நடத்தினர். இந்த காலணி வீசம் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க பின்னணியில் இருந்து செயல்பட்டவர் டாக்டர் சரவணன்தான் என திமுகவினர் குற்றம் சாட்டினர். அன்று பிற்பகலே செய்தியாளர்களை சந்தித்த சரவணன்  பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு சவால் விடுக்கும் வகையில் ஆவேசமாக பேசினார்.

இதையும் படியுங்கள்: இது சும்மா ட்ரெய்லர் தாம்மா.. இனிமேதான் மெயின் பிக்சரே இருக்கு.. இபிஎஸ்ஐ அலறவிடும் வைத்தியலிங்கம்.!

ஆனால் அன்று இரவே அதுவரை யாரை விமர்சித்து பேசினாரோ அதை பிடிஆர் வீட்டிற்கே சென்று அவரிடம் பகிரங்கமாக  மன்னிப்பு கோரினார். இவ்வளவுதான் சரவணன் அரசியல் என பாஜகவினர் அவரை சமூக வலைதளத்தில் டார் டாராக கிழித்தனர். இதற்கிடையில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார். உடனே திமுகவில் இணைவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார், தனது வாட்ஸ் ஆப் டிபியில் முதலமைச்சர் ஸ்டாலின் படத்தை வைத்துக் கொண்டு திமுகவின் அனுதாபம் தேடி காத்திருக்கிறார். 

Saravanan asked to throw sandal on PDR..? BJP complains to police asking for arrest..

மறுபுறம், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் மீது செருப்பு வீசுவதற்கு யார் காரணம், அதன் பின்னணியில் இருந்தது யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது,  பாஜகவினர் சரவணன் தான் காரணம், பாஜக தொண்டர் தவறாக தூண்டிவிட்டு செருப்பு வீச சொன்னவர் சரவணன்தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் டாக்டர் சரவணன் மாண்பை நீதி நிதியமைச்சர் காரின் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்கு தூண்டுகோலாக இருந்ததாக கூறி, அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாஜகவினர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

மீண்டும் திமுகவில் இணைந்து விடலாமென சரவணன் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்வருடன் தேநீர் அருந்த விரும்புவதாகவும் அவர் உருக்கமாக பேட்டி கொடுத்தார், ஆனால் திமுகவில் இருந்து இதுவரை அவருக்கு எந்தவிதமான சமிக்ஞைகளும் வராததால் அவர் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios