பாஜக அதிமுக கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த சரத்குமார் தற்போது அந்த கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பாஜக அதிமுக பாமக ஆகிய கட்சிகள் இணைந்து சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து உள்ளதாக சரத்குமார் சில நாட்களுக்கு முன்பு சூடான பேட்டி அளித்திருந்தார். ஒருவரை ஒருவர் மிகக்கேவலமாக பேசிக் கொண்டு கூட்டணி வைத்துக் கொள்வது என்பது அதிமுக பாஜக பாமக ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சரத்குமார் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கூறி அக்கட்சித் தொண்டர்கள் பீதிக்கு உள்ளாக்கினார் சரத்குமார். 

ஆனால் தனித்துப் போட்டி என்று அறிவித்ததோடு சரி வேட்பாளர்களை தேர்வு வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு என்ற எந்த தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டிலேயே அடைந்து கிடந்தார் சரத்குமார். இந்த நிலையில் கடந்த வாரம் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 4 பேர் சரத்குமார் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி அக்கட்சியில் இருந்து விலகினார். இதற்கு காரணமாக சரத்குமார் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டினர். 

அந்த நான்கு மாவட்டச் செயலாளர்களும் கூறியது போலவே சரத்குமார் தற்போது அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதற்காகவே கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டுக்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆதரவு கோரியுள்ளனர். தனித்துப் போட்டி என்று அறிவித்த சரத்குமார் திடீரென அதிமுக கூட்டணிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதற்கு ராதிகா தான் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர் அக்கட்சியின் நிர்வாகிகள். 

40 தொகுதிகளுக்கும் போட்டியிட்ட வேட்பாளர்கள் முன் வராத நிலையிலும் தூத்துக்குடி கன்னியாகுமரி விருதுநகர் மதுரை தேனி தென் சென்னை வடசென்னை ஆகிய தொகுதிகளில் சரத்குமார் கட்சிக்காக போட்டியிட ஏராளமானோர் முன்வந்தனர். ஆனால் அதனை எல்லாம் சரத்குமார் பொருட்படுத்தாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். இதற்கு தனித்துப் போட்டி என்கிற சரத்குமார் முடிவுக்கு ராதிகா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது தான் காரணம் என்று சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தற்போது சரத்குமாருடன் நெருக்கமாக இருக்கும் சேவியர் என்பவர் மூலமாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சரத்குமாரை தற்போது அங்கு கோர்த்துவிட்டு உள்ளதும் ராதிகா தான் என்று திட்டவட்டமாக பேசிக் கொள்கிறார்கள்.

சன் டிவியில் தற்போது ராதிகா நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் எதிர்பார்த்த அளவிற்கு ராதிகாவின் வருமானமும் இல்லை. வருமானம் குறைந்த நிலையில் தான் அதிமுகவுடன் சரத்குமாரை கோரிக்கை வைத்துள்ளார் ராதிகா என்று அக்கட்சியினர் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.