Sarath Radhika in the money laundering complaint in the office of the commissioner

திரைப்படம் தயாரிக்க ரூ.3.8 கோடி வாங்கிவிட்டு திருப்பி தரவில்லை என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீது தயாரிப்பாளர் சீனிவாசன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சரத்குமாரும், அவரது மனைவி ராதிகாவும் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடந்த சில நாட்களாக பல மோசடி புகார்களில் சிக்கி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கத்தில் முறைகேடு செய்தாக கூறி சரத்குமார் மீது பல குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன.

இதையடுத்து நடந்த நடிகர் சங்க தேர்தலிலும் தோற்கடிக்கபட்டார். பின்னர், இவர் ஜெயலலிதாவிற்கு விசுவாசியாக இருந்தாலும் இதுகுறித்த வழக்குகளில் ஜெயலலிதா இவருக்கு சிறிதும் உதவவில்லை.

இதனால் மிகுந்த விரக்தியில் இருந்த சரத் அரசியல் தலையீடுகளிலும் சற்று அடக்கி வாசித்தார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகே தலையை வெளியே காட்ட ஆரம்பித்தார்.

தொடர்ந்து நான் யாரிடமும் இனி நிற்க மாட்டேன், யாருக்காவது வேண்டுமென்றால் என்னை தேடி வரட்டும் என்று தொலைகாட்சியில் பேட்டி எல்லாம் கொடுத்து விட்டு தினகரனிடம் போய் சரணடைந்தார்.

அவரை பார்த்த அடுத்த நாளே வருமான வரி சோதனையில் சிக்கினார். அவரிடம் எதுவும் கைப்பற்றபடவில்லை என்றாலும் விசாரணைக்காக இழுக்கடிக்கபட்டார்.

இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா மீது பட தயாரிப்பாளர் சீனிவாசன் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் பாம்பு சட்டை என்ற படத்தை தயாரிக்க, சரத்குமார், ராதிகா மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர், 'மேஜிக் பிரேம்ஸ்' என்ற கம்பெனியில், எங்கள் நிறுவனத்தையும் பங்குதாரராக்க வேண்டும் என்றனர்.

அதற்காக, 1.50 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இந்த கடனை, வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை, படத்தை, 'டிவி' சேனல்களுக்கு விற்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் எங்களுக்கே உரியது என, ஒப்பந்தம் போட்டோம்.

ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி, சட்டவிரோதமாக படத்தை, ரிலீஸ் செய்து விட்டனர். இது பற்றி, சரத்குமார் மற்றும் ராதிகா உள்ளிட்ட மூன்று பேரிடம் கேட்டபோது, கடன் தொகையை திருப்பி தந்து விடுவதாக கூறினர்.

ஆனால், இதுநாள் வரை திருப்பி தரவில்லை; வட்டியும் செலுத்தவில்லை. எங்களுக்கு, இன்றைய தேதியில், அவர்கள், 3.85 கோடி ரூபாய் தர வேண்டும்.

சரத்குமார் மற்றும் ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர், எங்களுக்கு தர வேண்டிய, 3.85 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில், இந்த புகார் குறித்து சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் இன்று கமிஷனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். புகார் கொடுத்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய வந்துள்ளனர்.