மராஷ்ட்ரா  அரசியலில் திடீர் திருப்பமாக    முதலமைச்சராக  தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக  அஜித் பவார் இன்று காலை பதவியேற்றுக் கொண்டனர்.  அவர்களுக்கு  ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து அரசு அமைக்க நேற்று முடிவு செய்யப்பட்டது. இதை நேற்று சரத் பவார் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும், சரத்பவாரின் மருமகனுமான அஜித் பவார், 30 எம்எல்ஏக்களுடன் பாஜக ஆட்சி அமைச்ச திடீரென ஆதரவு அளித்துள்ளார். 

இதையடுத்து அதிரடியாக இன்று அதிகாலை 5,45 மணிக்கு மகாராஷ்ட்ராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. பின்னர் தேவேந்திரநாத் பட்நவிஸ் முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து மூத்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறும் போது,  அஜித் பவாரும் அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் மற்றும் மராட்டியத்தை  அவமதித்துள்ளனர் என கூறினார்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது டுவிட்டர் பக்கத்தில், மகாராஷ்ட்ராவில் கதிய  அரசை உருவாக்க பாஜகவை ஆதரிக்க அஜித்பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல. அவருடைய இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.