பேசியே மயக்குபவர் பிரதமர் மோடி - சரத்பவார் கிண்டல்!

பிரதமர் நரேந்திர மோடி பேசி மயக்குபவர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்பவார், பிரதமர் நரேந்திர மோடி அரசியல் வழிகாட்டியாக தன்னைக் குறிப்பிட்டு, பொதுக் கூட்டம் ஒன்றில் பாராட்டிப் பேசியதை கூறினார். மோடி பேசியே அனைவரையும் மயக்குபவர் என்றும், அவருடைய பேச்சைக் கேட்கும் யாரும், அவர் சக்தி வாய்ந்த மனிதர் என்று நம்பும் அளவுக்கு மோடியின் பேச்சு இருப்பதாகவும் குறிப்பிட்டார். 

ரூபாய் நோட்டு பிரச்னையை தீர்க்க பிரதமர் மோடி கேட்ட 50 நாட்கள் அவகாசமும் முடிந்துவிட்டதால், அவருக்கு என்ன தண்டனை அளிக்கலாம் என்பது குறித்து பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனக் கட்சி முடிவு செய்ய வேண்டும் என்றும் சரத் பவார் தெரிவித்தார்.