மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரியின் முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரியின் முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்களை 'ஹிப்போகிரேடிக்' உறுதிமொழியை ஏற்க வைப்பதற்கு பதிலாக சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்க வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கலந்து நீதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிகழ்ச்சியிலே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த நிலையில் கல்லூரியின் முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாது இப்போகிரேடிக் உறுதிமொழியையே பின்பற்றுமாறும் மருத்துக் கல்லூரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சமஸ்கிருத உறுதிமொழி பற்றி மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் மருத்துவக்கல்வி விளக்கம் கோரியுள்ளது. மேலும் தவறுதலாக சமஸ்கிருத மொழியிலிருந்து உறுதிமொழியை பதிவிறக்கம் செய்ததாக முதல்வர் ரத்தினவேல் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.HIPPOCRATIC உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டதாகவும், இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல் என்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
