Asianet News TamilAsianet News Tamil

தமிழ், கன்னடத்தை விட சமஸ்கிருதம் பழமையானது.. அதுதான் தேசிய மொழியாக வேண்டும்.. கங்கனா திமிர் பேச்சு.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை தேசிய மொழியாக ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியிருந்தார் அவரின் இந்த பேச்சு தென்னிந்திய மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sanskrit is older than Tamil and Kannada .. that should be the national language .. Kangana speech.
Author
Chennai, First Published Apr 30, 2022, 11:03 AM IST

தமிழ், கன்னடம், இந்தியை விட சமஸ்கிருதம் பழமையானது என்றும், சமஸ்கிருதத்திலிருந்து இம்மொழிகள் உருவாக்கியிருக்கலாம், எனவே நம் நாட்டின் தேசிய மொழியான சமஸ்கிருதத்தை ஏன் ஏற்கக்கூடாது என கங்கனா ரனாவத் கூறியுள்ளார். அமித்ஷா, அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் இந்திக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ள நிலையில் இன்னும் ஒருபடி மேலே சென்று சமஸ்கிருதத்தையே தேசிய மொழியாக்க வேண்டும் என கங்கனா ரணாவத் கூறியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை தேசிய மொழியாக ஏற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியிருந்தார் அவரின் இந்த பேச்சு தென்னிந்திய மாநிலங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ' விக்ரம் ராணா' பட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசுகையில் இந்தி தேசிய மொழி கிடையாது, பாலிவுட் நட்சத்திரங்கள் பான் இந்தியா படங்களை எடுக்கிறார்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்கிறார்கள் எனக் கூறி இருந்தார். அவரின் இந்த வீடியோ வைரலானது. இதற்கு பதில் தெரிவித்த ஹாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சகோதரர் கிச்சா சுதிப் அவர்களே இந்தி நமது தேசிய மொழி இல்லை என்றால் நீங்கள் ஏன் கன்னட மொழி படங்களை இந்தியில் டப் செய்கிறீர்கள்.

Sanskrit is older than Tamil and Kannada .. that should be the national language .. Kangana speech.

ஹிந்தி எப்போதும் இந்தியாவின் தாய் மொழியாகவும், தேசிய மொழியாகவும் இருக்கும் என்றார். அவரின் இந்த டுவிட்டர் பதிவை இந்தியில் பதிவிட்டிருந்தார். இதற்கு உடனே மறுப்பு தெரிவித்த சுதீப் உங்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அப்படி சொல்லவில்லை. நேரில் சந்திக்கும் போது எந்த நோக்கத்திற்காக அப்படி சொன்னேன் என்பதை விளக்குகிறேன், ஆனால் நீங்கள் இந்தியில் பதிவிட்டுள்ள இந்த பதிவு எனக்கு புரிந்தது, நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம், இதே போல ஒரு வேலையை நான் எனது தாய் மொழியான கன்னடத்தில் என் பதிலை பதிவு செய்திருந்தால் உங்கள் நிலைமை  என்னவாக இருக்கும்? நாங்களும் இந்தியாவில் தான் இருக்கிறோம் சார் என்ன பதிலடி கொடுத்தார். கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு ஆதரவாக பலரும் அஜய்தேவ்கனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜய்தேவ் கானுக்கு ஆதரவாக மற்றொரு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கருத்து கூறியுள்ளார். அதாவது இந்தி எங்கள் தேசிய மொழி என்று அஜய்தேவ்கன் கூறியது சரிதான். ஆனால் ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மொழி மற்றும் கலாச்சாரத்தை பற்றி பெருமைப்பட உரிமை உண்டு என்றும், இந்தியை தேசிய மொழியாக அங்கீகரிக்க மறுப்பது அரசியலமைப்பை எதிர்ப்பதற்கு சமம் என்றும், இந்தியை தேசிய மொழியாகாது என  கன்னட நட்சத்திரம் கிச்சா சுதீப் கூறியதற்கு அஜய் தேவ்கன் கூறியதைப் போலவே இந்தியே நமது தேசிய மொழியாக இருக்கும் என கங்கனா உறுதிபட கூறியுள்ளார். அதாவது தனது ' தாகத் '   திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித் அவர், இந்தியாவின் பழமையான மொழிகளில் சமஸ்கிருதம் ஒன்று.

Sanskrit is older than Tamil and Kannada .. that should be the national language .. Kangana speech.

கன்னடம் அல்லது  தமிழைக் காட்டிலும் இந்தியை விட பழமையானது சமஸ்கிருதம் தான்,  ஏன் சமஸ்கிருதம் நமது தேசிய மொழியாக இருக்க கூடாது. ஒருவேளை அந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்திருக்கலாம்,  ஹிந்தி,  ஜெர்மன்,  ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளன. சமஸ்கிருதம் ஏன் இந்தியாவின் அலுவல் மொழியாக இல்லை. பள்ளிகளில் ஏன் அதை கட்டாயப்படுத்தவில்லை என ஆவேசமாக அவர் கேள்வி எழுப்பினார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios