samuthrakani tweet about sterlite problem



தங்களது வாழ்வாதாரங்களையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வீதியில் இறங்கி வந்து போராடும் எழை-எளிய மக்களை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுத்தள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ்  கூட்டமே, எங்க எல்லாத்தையும் கொன்னுட்டு  நீங்க நல்லா இருங்க என இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி வயிறு எரிந்து சாபம் விட்டுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதால் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள்  தங்களது கண்டனங்களைத்  தெரிவித்துள்ளனர்.

மேலும்  திரையுலகைச் சேர்ந்த கமல்ஹாசன்,  ரஜினி, சூர்யா,  ஹரிஷ் , பிரகாஷ் ராஜ், ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் தங்களது கோபத்தையும், ஆதங்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர். 



இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘எல்லாத்தையும் கொன்னுட்டு நீங்க மட்டும் நல்ல இருங்க’’ என்று தமிழக அரசை விமர்சித்து ட்விட் செய்துள்ளார். 

தங்களது வாழ்வாதாரங்களையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வீதியில் இறங்கி வந்து போராடும் எழை-எளிய மக்களை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுத்தள்ளும் இபிஎஸ், ஓபிஎஸ்  கூட்டமே, எங்க எல்லாத்தையும் கொன்னுட்டு  நீங்க நல்லா இருங்க என சமுத்திரகனி வயிறு எரிந்து சாபம் விட்டுள்ளார்.


இயக்குனர் சமுத்திரக்கனி தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமானவர். மக்களுக்கு ஆதரவாக ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.