Asianet News TamilAsianet News Tamil

வளர்ச்சித் திட்டங்களை சமாஜ்வாதி அரசு முடக்குகிறது..!! ஆளும்கட்சிக்கு எதிராக ஹேமமாலினி பரபரப்பு குற்றச் சாட்டு......!!

samaaj vaadi-party-acts-opposite-said-hemamalini
Author
First Published Feb 4, 2017, 7:57 PM IST


மதுரா நாடாளுமன்ற தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை ஆளும் சமாஜ்வாதி அரசு முடக்குவதாக நடிகையும், எம்.பி.யுமான ஹேமமாலினி குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரா நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருப்பவர் நடிகை ஹேமமாலினி. பாரதிய ஜனதா கட்சி சார்பில் மதுரா தொகுயில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர். மட் மற்றம் பால்தேவ் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு மீது சரமாரியாக குற்றச் சாட்டுகளைத் தெரிவித்தார். அவர் பேசியதாவது:

மதுரா மக்களவைத் தொகுதியில், வளர்ச்சித் திட்டங்களைச் செய்லபடுத்த ஆதரவு அளிக்க மறுக்கிறது. ஒன்று திட்டத்தை முடக்கப் பார்க்கிறது அல்லது காலதாமதம் செய்கிறது. இங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த நாங்கள் உறுதி பூண்டு இருக்கிறோம். ஆனால், சமாஜ்வாதி அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை.

மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த ஒருங்கிணைப்பு வேண்டுமானால் மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்ய வேண்டும். எனவே, பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

500, ஆயிரம் ரூபாய் ஒழிக்கப் பட்டதால், கருப்புப் பண முதலைகளுக்குத்தான் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. சாமான்ய மக்களக்கு எந்த பாதிப்பும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உ.பி. சட்டமன்ற தேர்தல் வருகிற 11-ந்தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios