மாவட்டச் செயலாளர் மற்றும் சில நிர்வாகிகளை நீக்கியது தொடர்பாக சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட செயலாளரையும் பல்வேறு மாவட்ட மாநகர நிர்வாகிகளின் பதவிகளையும் சீரமைத்து மாநில நிர்வாகத்திடம் இருந்து அறிவிப்பு வெளிவந்தது. இதில் முக்கியமாக கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தை கட்டிக்காத்து ஒட்டுமொத்த மாவட்டத்தில் உள்ள ரசிகர்களை அரவணைத்து சென்று சிறப்பாக பணியாற்றி கொண்டிருந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் திரு S.M. பழனிவேல் அவர்களை பதிவிறக்கிக்கம் செய்து மாவட்ட இணை செயலாளராகவும், மாநகர செயலாளர் திரு V.S.ஜான் மணிமாறன் அவர்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராகவும் மற்றும் பல்வேறு நிர்வாகிகளை பதிவிறக்கம் செய்து அறிவிப்பு வெளியானது.  

இதில் மாநகர நிர்வாகிகள் தாங்கள் இதுவரை செய்த பணிக்கு விளக்கம் கேட்க மாநில நிர்வாகிகளை சந்திக்க தேதி நேரம் கேட்கும் பொழுது மாநில நிர்வாகிகள் தேதி நேரம் கொடுக்கவில்லை.ஆகவே ஒட்டுமொத்த மாநகர நிர்வாகிகள் அனைவரும் முன்னாள் மாநகர செயலாளர் திரு ஜான் மணிமாறன் அவர்களின் தலைமையில் மாநகர தலைமை அலுவலகத்தில் 60-க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற மாநகர நிர்வாகிகளுடன் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 

நம் அன்பு தலைவர் தேதி நேரம் ஒதுக்கி நேரில் சந்தித்து தங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தையும் செய்த பணியையும் தெரிந்துகொள்ளும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.  மாநகரத்தில் மொத்தம் 752 பூத் புத்தகத்தில் 550 க்கும் மேற்பட்ட பூத் புத்தகத்தை மிகவும் சிரமப்பட்டு பூர்த்தி செய்துள்ளதே மாநகர நிர்வாகிகள் செய்த பணி என்று அவர்கள் தெரிவித்தனர்கள்.  மேலும் இதுநாள் வரை மாவட்ட நிர்வாகத்தில் சமநிலைமை, சமத்துவம் நிலவி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த சூழ்நிலையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட நிர்வாகிகள் தனி நபர் ஆளுமை செய்து மன்ற நிர்வாகிகள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் பெறுகின்றனர்.   

மேலும் பதவி இறக்கம் செய்யப்பட்ட பல நிர்வாகிகளும் முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்டும் பல நிர்வாகிகளும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபடும் நிலையிலும் இருக்கின்றனர்கள். அது போன்ற அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு சேலம் ரஜினி மக்கள் மன்றத்தில் மாபெரும் அதிருப்தி, எதிர்ப்பு, குழப்பம், கெட்ட பெயர் ஏற்படும் முன்பே மாநில நிர்வாகமும் அன்பு தலைவர் அவர்களும் இந்த பிரச்சினையை நேரடி கவனத்தில் எடுத்துக் கொண்டு தக்க தீர்வை காண வேண்டும் என உரிமையுடனும்  அக்கறையுடனும்  வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.