பேட்ட படத்தில் ரஜினி இப்படி வைச்சு செய்வார் என எதிர்பார்க்காத அளவிற்கு இந்து மத வெறியர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றி இருக்கிறார்கள். ஹெச்.ராஜா, தமிழிசை போன்றோரெல்லாம் படத்தை பார்த்தால் ரஜினியை அட்டாக் செய்யப்போவது உறுதி என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்...

ரஜினி நடித்த பேட்ட படத்தின் மையக் கருவே மதத்திற்கெதிரான ஆணவப்படுகொலைதான். முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த சசிகுமார் மாற்று மதப்பெண்ணை காதல் திருமணம் செய்கிறார். இதனால், கொத்தித்தெழும் அந்தப்பெண்ணின் அண்ணன்கள் சசிகுமாரை படுகொலை செய்கிறார்கள். இதற்கு பலிவாங்கக் கிளம்புகிறார் ரஜினி. சில காட்சிகளில் இந்து மதவெறியர்களின் செயல்பாடுகளையும் கிழித்து தொங்க விட்டிருக்கிறார்கள். ரஜினி காப்பாற்றச் சென்ற காதல் ஜோடிகள் ஒரு காட்சியில் காதலர் தினத்தன்று கல்லூரி வளாகத்திற்குள் முத்தம் கொடுக்க தயாராகிறார்கள்.

அதைப்பார்த்து சுவர் ஏறிக்குதித்து கல்லூரிக்குள் வரும் பாபி சிம்ஹா, அந்தக் காதலர்களை மிரட்டி, ஒண்ணு இங்கேயே இப்போதே கல்யாணம் பண்ணிக்கோங்க. இல்ல இப்பவே அண்ணன் தங்கைனு மாற்றி உறுதிப்படுத்துங்க’ என மிரட்டுகிறார். அந்தக் காட்சியின் பின்னணியில் கழுதையும் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்து மதக் கட்சிகள் காதலர் தினம் தோறும் காதலர்கள் கூடும் இடத்திற்குச் சென்று அவர்களை மிரட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் காதலர்களுக்கு இப்போதே, இங்கேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அல்லது கழுதையை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கழுதையையும் அழைத்துக் கொண்டு வருவார்கள். அவர்களை போன்ற இந்துக்களை பேட்ட படம் சீண்டி இருக்கிறது.  ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ரஜி இந்து மதக் கட்சியில் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். அவர் எப்படி பேட்ட படத்தில் இப்படிப்பட்ட காட்சிகளை அமைக்க அனுமதி கொடுத்தார்? முஸ்லீம்களுக்கு ஆதரவாக ஆணவ படுகொலை சம்பந்தப்பட்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என அதிர்ச்சியாகிறார்கள். நிச்சயம் ரஜினி அனுமதிக்காமல் இயக்குநர் கார்த்திக்ச் சுப்புராஜ் இது போன்ற காட்சிகளை அமைத்திருக்க மாட்டார் என்கிறார்கள் திரையுலகினர்.

இந்தப்படத்தை பார்த்தால் நிச்சயம் பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜாவும், தமிழிசையும் ரஜினியை விமர்சித்து அட்டாக் செய்யப்போவது உறுதி என்கிறார்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்.