இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் கறுப்பு,சிவப்பு, வெள்ளை நிறம் கொண்ட அதிமுகதான் ஆட்சியில் இருக்கும் என்றும், காவிக்கு இங்கு இடமில்லை என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின் துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இந்த நியமனத்தில் மத்தி அரசின் தலையீடு இருந்துள்ளதாகவும்,  தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து செய்தியாள்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு துணைவேந்தரை நியமித்துள்ளதாக இதில் அரசுக்கு எந்த சம்பந்தமில்லை. ஆளுநரில் அதிகாரித்தில் அரசு தலையிட முடியாது. நாட்டிலேயே அறிவுசார் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என தெரிவித்தார்.. 

தமிழகத்தில் உள்ள கல்வியாளர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் . தமிழகத்தை கருப்பு, வெள்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும், காவிக்கு இங்கே இடமில்லை என்றும் கூறினார்.  

தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்து ஐபிஎல் நடத்தலாமா வேண்டாமா என்பதை பிசிசிஐ முடிவு செய்ய வேண்டும் என்றும்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை  நுறு சதவீதம் உள்ளது என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.