கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கென்று பலமான தலைமை இல்லை இதனால், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சரி செய்யவேண்டும் என்பது தான் சபரீசனின் ப்ளான்.  அதைச் சரிசெய்து திமுகவின் வலிமையைக் கூட்ட காசு உள்ள பார்ட்டியா இருக்கணும் அது அதிமுகவோ இல்ல அமமுகவோ என எதுவாக இருந்தாலும், கட்சியை பொறுத்தவரை கொங்கு மண்டலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்  ஜாம்பவானாக இருப்பது யாரென்று சல்லடைப்போட்டு தேடியதில் சிக்கியது இன்று அறிவாலயத்தில் தனதுபலத்தை காட்டிய மிஸ்டர் மாஜி செந்திலேதான். 

முதலில் அமமுகவிலிருந்து தூக்கனுமா என யோசித்த இந்த டீம், 'ஓபிஎஸ் - ஈபிஎஸ்' ஆட்சியில் இருக்கும் வரைதான் மதிப்போடு இருப்பார்கள். தினகரன் தான் ஆட்சி போன பிறகும்  திமுகவிற்கு டப் பைட் கொடுப்பார் அதனால் , நம்ம டார்கெட் அமமுக தான் அதிலேயும் பணபலம் கொங்கு பெல்ட்டை தன கட்டுப்பட்டி வைத்திருக்கும் செந்திலை தூக்கினால்,  அமமுக கூடாரமே காலியாகிவிடும், தற்போது இருக்கும் அமைச்சர் மற்றும் துணை சபாநாயகர் என அவர்களை காலி செய்ய செந்தில் தான் சரியான ஆள், அதுமட்டுமல்ல, இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர். ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான். அதுமட்டுமல்ல, சைலண்ட்டாக வாயே திறக்காமல் வேலையை முடிப்பார் இது தான் செந்தில் பாலாஜியின் சக்சஸ் ஃ பார்முலா. அதனால,  தினகரன் தலையில் கை வைப்பதில் தப்பே இல்லை என களமிறங்கியது சபரீசன் டீம்.

இந்த சமயத்தில் தான், கடந்த வாரத்தில் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் திருச்சியில் உள்ள  ஒரு ஹோட்டலுக்குக்  வந்திருக்கிறார். அன்பில் மகேஷ் வந்த சில  மணிநேரங்களுக்குப் பிறகு  வந்த செந்தில் பாலாஜி  நேராக அன்பில் மகேஷ் தங்கியிருந்த அறைக்குப் போயிருக்கிறார். மூன்று மணிநேரத்துக்கும் மேலாக இருவரும்  டீல் செந்தில் பாலாஜி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.  இந்த சீக்ரெட் மீட்டிங்  கரூர் திமுக, அமமுக மற்றும் அதிமுக வட்டாரத்தில் தீயாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது.

செந்தில் பாலாஜியால் மனம் நொந்துப்போன தினகரன், அவரைச் சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சிகளைச் செய்தார். ஆனால், செந்தில் பாலாஜி கடந்த ஒரு வாரமாகத் தினகரனிடம் பேசுவதையே தவிர்த்துவிட்டார். ஆனாலும் விடாத தினகரன்  பழனியப்பனை அனுப்பி சமாதனம் பேசியிருக்கிறார். அப்போது பழனியப்பனுக்கு போன் போட்ட தினகரன், ‘அய்யாவை போனை அட்டெண்ட் பண்ணி ஒரேயொரு நிமிஷம் பேசச்சொல்லுங்க. நான் ரெண்டு வார்த்தை பேசணும்!’ என்றிருக்கிறார். 

எப்படியாவது செந்திலை என்கிட்ட பேச வையுங்க. என்று கிட்டத்தட்ட கெஞ்சும் குரலில் பழனியப்பனிடம் தினகரன் பேசினாராம். ஆனால் தன் பிடியில் படு பிடிவாதமாய் நின்றுவிட்ட செந்தில்பாலாஜி, தனது குரலை கேட்டால் நிச்சயம் செந்தில்பாலாஜி யோசிக்க துவங்குவார், முடிவை மறுபரிசீலனை செய்வார்! என்கிற நம்பிக்கையில்தான்  எந்த ஈகோவும் பார்க்காமல் செந்தில்பாலாஜியின் லைனுக்கு தானே அழைத்திருக்கிறார்.  ஆனால் தன் பிடியில் படு பிடிவாதமாய் நின்றுவிட்ட செந்தில்பாலாஜி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவுமில்லையாம், மனமிறங்கவும் இல்லையாம். 

இதனையடுத்து,‘கரூரில் பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்டி அங்கே இணைப்பு விழா நடத்தலாம்’ என்று செந்தில் பாலாஜி ஆர்வமாக இருந்திருக்கிறார். ‘ஆனால் அன்பில்  சபரீசனுடன் செந்திலின் ஆர்வத்தை சொல்லியிருக்கிறார். பிரமாண்ட விழா, கெத்து காட்டுவது தேவை தான் ஆனால்  முதலில் வந்து அறிவாலயம் வந்து கட்சியில் இணையட்டும் அதற்கு பிறகு கரூரில் பிரமாண்ட விழா நடத்த சொல்லுங்க என  சபரீசன் சொல்லியிருக்கிறார்.  

அதன் பிறகு இது தொடர்பாக செந்தில் பாலாஜியுடன் அன்பில் மகேஷ் சபரீசன் சொன்னதை செந்தில் பாலாஜியிடம் சொல்லியிருக்கிறார். ‘அவரு சொல்றது சரிதான்... அப்படின்னா இணைப்பு விழாவை இங்கே முடிச்சிட்டு, கரூரில் தலைவரை வெச்சு ஒரு பிரமாண்ட விழா நடத்திடலாம்..’ என செந்தில் பாலாஜியும் ஒகே சொல்ல ஸ்டாலினும்  இந்த டீலுக்கு டபுள் ஒகே சொல்லியிருக்கிறார்.