அரசியல்வாதிகளின் இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் ஏனென்றால் மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அதிரடியாக கருத்து  தெரிவித்துள்ளார் .  நடிகர் விஜய்யின் தந்தை சமீபகாலமாக சினிமாவைத் தாண்டி அரசியல் விவகாரம் குறித்து அடிக்கடி கருத்துக்களை கூறி வருகிறார் .  இது சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறது , சில நேரங்களில் மிகுந்த வரவேற்பையும் பெறுகிறது  இந்நிலையில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது .

 

அதில் கலந்து கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர்  நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ,  அப்போது பேசிய அவர்,  மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால் இனி அரசியல்வாதிகள் அரசியலை வியாபாரம் செய்யாதீர்கள் என்றார் .  யார் மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெற முடியும் என்றார். அரசியல்வாதிகள் பணம் மற்றும் இலவச பொருட்கள் கொடுத்தால் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறார்கள் ஆனால் மக்கள் மத்தியில் அந்த எண்ணம்  மாறிக் கொண்டே வருவதால் அரசியல்வாதிகள்  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றார் .  தொடர்ந்து பேசிய அவர் கடந்த நான்கு ஐந்து வருடமாக திரைப்படத்துறை மிக மோசமான அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது . 

தயாரிப்பாளர் மட்டும் நடிகர்கள் சங்கம் சரியாக செயல்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுகிறது மேலும் அரசு அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்கம் தேர்தல் முதல் கொண்டு நடிகர் சங்கத் தேர்தல் என அனைத்திலும்  தலையிடுவதாக குற்றம்சாட்டினார் நடிகர் விஜய் அரசியலுக்கு வர போகிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் அவரது தந்தை இப்போது அவரின் அரசியலுக்கு அச்சாரம் போட்டு வருவதை எஸ்ஏசியின்  இந்த பேட்டி காட்டிகிறது.