புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பரப்புரை செய்ய வேண்டும் என தன் தொண்டர்களுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளதை ட்விட்டரில் கேலி செய்திருக்கிறார் எஸ்.வி.சேகர்.

இன்று விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் அவர் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசிய திருமாவளவன் புதிய கல்விக் கொள்கைகளுக்கு எதிராக பரப்புரை நிகழ்த்துமாறு தன் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் கேலி செய்யும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் ‘அதென்ன புதிய கல்வி கொள்கைக்கு எதிராக?! கல்விக்கு எதிரான பரப்புரை செய்தாலே கூட்டம் குவியுமில்ல.. பொழைப்பும் ஓடும்’ என கூறியுள்ளார்.

இதற்கு எஸ்.வி.சேகரின் பதிவில் எஸ்.வி.சேகர் ஆதரவாளர்களும், திருமா ஆதரவாளர்களும் கமெண்டில் சண்டையிட்டு வருகின்றனர்.ஏற்கனவே கல்விக்கு எதிராகத் தானே உள்ளனர்,

பஸ் டே கொண்டாட்டங்கள் செய்வது யாரு,அரசு கல்லூரியில் சேர்ந்து எல்லாவற்றையும் இலவசமாக பெற்றுவரும் ஆட்கள் தானே?எந்த இன்ஜினியரிங், மருத்துவ கல்லூரி மாணவர்கள் இது போல கொண்டாடுகிறார்கள், காலை 6 மணிக்கு பஸ்ஸில் தூங்கிய படி பயணிக்கின்றனர். BC MBC SC STக்கான சலுகைகளை நிறுத்தினால் போதுமானது. கொட்டம் அடங்கிவிடும் இப்படி போகிறது ஆதரவாலர்களின் பதிவுகள்.