Asianet News TamilAsianet News Tamil

5 ஆண்டில் 5 ஆயிரம் கோடியை வாயில் போட்ட S.P வேலுமணி..ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க மாட்டார்.. கதறும் Ex எம்.பி

இது அனைத்தையும் தெரிந்துகொண்டு எதற்காக திமுக வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்கிறது என்று புரியவில்லை, எஸ். பி வேலுமணி மீது திமுக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை, 

S.P Velumani who looted Rs 5,000 crore with in 5 years .. Stalin will not take action .. screaming former minister.
Author
Chennai, First Published Nov 10, 2021, 3:03 PM IST

இந்த மழை வெள்ளத்திற்கு பிறகாவது  ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஊழலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி  மீது முதலமைச்சர் ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்காதது அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்.பி வேலுமணி ஊழலுக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளே இப்போது மாநகராட்சியில் அதிகாரிகளாக இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இரவு பகலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. குறிப்பாக வட சென்னையில் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக கால்வாய்களை தூர்வாரததே வெள்ளத்துக்கு காரணம் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஊழல் நடந்திருக்கிறது என்றும் அவர் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணி மீது பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

S.P Velumani who looted Rs 5,000 crore with in 5 years .. Stalin will not take action .. screaming former minister.

இதே புகாரை முன்வைத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு முன்னாள் அதிமுக  எம்.பி  கே.சி பழனிச்சாமி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில், கடந்த 2015 இல் ஏற்பட்ட வெள்ளம் சென்னையை மோசமாக தாக்கியது. அந்த நிகழ்வுக்குப் பிறகு சென்னையில் இதுபோன்ற ஒரு சூழல் இனியும் ஏற்படக் கூடாது என்பதற்காக 2015 இல் இருந்து 2021 வரை கடந்த  5, 6 ஆண்டு காலத்திற்குள் மிகப்பெரிய ஒரு தொகை கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து கடன் வாங்கப்பட்டு சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. அதாவது சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் அந்த 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதாவது 200 வார்டு என்றால் ஒரு வார்டுக்கு கிட்டத்தட்ட 25 கோடி ரூபாய் அளவிற்கு செலவிட பட்டதாக தெரிவிக்கிறார்கள். ஆனால்  அந்த அளவிற்கு பணிகள் நடைபெற்றிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த நிதி முழுக்க முழுக்க எஸ்.பி வேலுமணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கும் காண்ட்ராக்ட் என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. 

S.P Velumani who looted Rs 5,000 crore with in 5 years .. Stalin will not take action .. screaming former minister.

அதில் பெயரளவிற்கு சில பணிகள் மட்டுமே நடந்திருக்கிறது, அந்த 5000 கோடி ரூபாய்க்கு பொருத்தமான பணிகள் நடைபெறவில்லை, நிச்சயமாக அரசாங்கம் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நீதிமன்றமே இது குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில் ஏன் அரசாங்கம் தயங்குகிறது.? அதனால் வேலுமணி மீதும் அன்றைக்கிருந்த அதிகாரிகளின் மீதும் உரிய நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும், அந்தப் பணத்தையும், சொத்துக்கள் முறைகேடாக பயன் படுத்தப்பட்டதையும் கண்டறிந்து அதனை பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

ஆனால், இந்த விவகாரத்தில் எஸ்.பி வேலுமணி அதிமுக பெயரைச் சொல்லியோ அல்லது அம்மா அவர்களின் பெயரைச் சொல்லியே அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது, அவர் தனிப்பட்ட முறையில் செய்த ஊழலுக்கு அவர் தகுந்த தண்டனை பெற்றே ஆகவேண்டும் என கூறியுள்ளார். எஸ். பி வேலுமணி காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் கட்சியில் அவருக்கே இப்போது செல்வாக்கு இல்லை, அவர் வெள்ள நிவாரண பணிகளை பார்க்க சென்ற போது கூட கட்சி நிர்வாகிகள் யாரும் அவரை பார்க்கச் வரவில்லை இதுதான் அவரின் நிலைமை என தெரிவித்துள்ளார்.

S.P Velumani who looted Rs 5,000 crore with in 5 years .. Stalin will not take action .. screaming former minister.

அதேபோல், வேலுமணி அமைச்சராக இருந்தபோது மாநகராட்சியில் நந்தகுமார் என்பவர்தான் தலைமைப் பொறியாளராக இருந்தார்.அவர்தான் வேலுமணிக்கு இடதுகையாகவும் வலது கையாகவும் இருந்தார். ஆனால் அவரே இப்போதும் அதிகாரியாக இருக்கிறார், அப்போது கார்த்திகேயன் ஐஏஎஸ் தான் மாநகராட்சியில் கமிஷனராக இருந்து வேலுமணிக்கு உறுதுணையாக இருந்தார் ஆனால் அவர்தான் இப்போதும் உயர்கல்வித் துறை செயலாளராக இருக்கிறார். 

இது அனைத்தையும் தெரிந்துகொண்டு எதற்காக திமுக வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்கிறது என்று புரியவில்லை, எஸ். பி வேலுமணி மீது திமுக நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை இல்லை, அப்படி ஒருவேளை நடவடிக்கை எடுப்பதாக இருந்தார் விரைந்து நடவடிக்கை எடுங்கள், இல்லை என்றார் சுமாட் சிட்டி திட்டத்தில் செய்த பணிகள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் சென்றுவிட்டது என்று அவர் சொல்ல வாய்ப்பிருக்கிறது என முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios