பெத்த பிள்ளைனுகூட பார்க்காம விஜய்க்காக அந்த கருமத்தையும் செய்து கொடுத்தேன்... பப்ளிக்காக போட்டுடைத்த எஸ்.ஏ.சி!
நானும் அவர் அம்மா ஷோபாவும் அவர் வீட்டுக்கு முன்னாடி போய் காரில் காத்திருந்தோம். அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னாருனு சொல்லி அழைப்பு வந்தது.
எஸ்.ஏ.சந்திரசேகர் உருவாக்கிய விஜய் மக்கள் இயக்கம்தன் கலைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என விஜய் தரப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் விஜய்க்காக எவ்வளவு பாடுபட்டேன். அவரை எப்படி முன்னணி நடிகராக கொண்டு வந்தேன் என எஸ்.ஏ.சந்திரசேகர் மனமுருக தெரிவித்துள்ளார்.
’’விஜயகாந்த் அப்போது நம்பர் ஒன் ஹீரோ. அவரிடம் சென்று ஒரு படத்தில் நீங்கள் கெஸ்ட் ரோல் பண்ணித் தரணும் சொன்னேன். என்ன கதை, என்ன கேரக்டர்னு எதுவும் கேட்கலை. எப்போ, எங்கே வரணும்னு சொல்லுங்க சார் என்றார். பொள்ளாச்சியில் பதினெட்டு நாள் விஜி நடித்து கொடுத்தார். அந்தப் படம்தான் செந்தூரப்பாண்டி. அடுத்து விஜய் இளைஞர்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்கணும்னு ரசிகன், தேவா, மாண்புமிகு மாணவன் என்று எழுதி வைத்து படம் பண்ணினேன்.
பெற்ற பிள்ளையை வைத்து ரொமாண்டிக்கா படம் எடுக்கிறார் என்று என்னை பற்றி தப்பா பேசினாங்க. சினிமாவுக்கு அவரை கொண்டுவர நான் பட்ட அவமானங்கள், கேலி, கிண்டல்களை எத்தனை? அப்போ சூப்பர் குட் பிலிம்ஸ் நல்ல நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து கொண்டு இருந்தாங்க. எத்தனை நாட்கள் விஜயோட ஆல்பத்தை வச்சுக்கிட்டு அந்த கம்பெனி வாசலில் நின்றிருக்கிறேன் தெரியுமா? சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரி சார்தான் பூவே உனக்காக விஜய் பண்ணினால் சரியாக இருக்கும் என்று சொன்னவர்.
அந்த படம்தான் விஜயின் நடிப்பில் முழு நம்பிக்கையைத் தந்த படம். துப்பாக்கி படம் வரைக்கும் நான் விஜய்யின் மேனேஜராக இருந்திருக்கிறேன். விஜய் இன்றைய இளைஞர்களின் ஒரு ஐகான். அவர் தாய், தகப்பனுக்கு எப்படி நீங்க மரியாதை கொடுக்கணும்னு சொல்ற இடத்துல இருக்காரு. ஆனா, சொந்த அம்மா அப்பா மேல கேஸ் போட்டு இருக்காரு. எந்த அப்பனும் பிள்ளை கெட்டுப் போகும் என்று நினைக்க மாட்டான். விஜய் ரசிகர் மன்றம் தொடங்கி அதை மக்கள் இயக்கமாக மாற்றியது நான் தான்.
ஒரு ரசிகன் வெறும் போஸ்டர் போட்டு கட்டவுட் வைத்து விட்டுப் போகக்கூடாது. இந்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய சொல்லி அவர்களை தயார் செய்தது நான். விஜய் நான் உனக்காகவே வாழ்கிறேன். உனக்காகவே வாழ்வேன். இன்னும் நான் இருப்பது உனக்காக தான் என மனமுருகி ஒரு கடிதம் போட்டேன். அதற்கு எந்த பதிலும் இல்லை. நானும் அவர் அம்மா ஷோபாவும் அவர் வீட்டுக்கு முன்னாடி போய் காரில் காத்திருந்தோம். அம்மாவை மட்டும் உள்ளே வரச் சொன்னாருனு சொல்லி அழைப்பு வந்தது. நாங்க கிளம்பி வந்துட்டோம். எந்த தகப்பனும் பிள்ளையின் வளர்ச்சியை பார்த்து பொறாமை பட மாட்டான்.
12 மணி நேரத்தில் 10 மணி நேரம் விஜயை சுற்றி ஒரு கூட்டம் சுத்திக்கிட்டே இருக்கு. அந்த கும்பல் தான் விஜய்க்கும் எனக்குமான நெருக்கத்தை உறவை பிரித்து வைக்கிறது. அந்த கும்பல் சொல்வதைத்தான் அவர் மைண்ட்ல ஓடிட்டு இருக்கு. அப்பா எது செய்தாலும் தப்பா தெரியுது. அவருக்கு அப்பா பண்றது எல்லாம் அவர் நன்மைக்கு என்று தெரிய மாட்டேங்குது. நவம்பர் 5ஆம் தேதி தளபதி மக்கள் இயக்கம் ஆரம்பித்து அதை சரியாக நடத்தி இருந்தால் கடந்த எலக்ஷனில் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருக்கும். அந்த தளபதி மக்கள் இயக்கத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னாரு. அப்போதுதான் அவரது படத்தை நானும், என் மனைவியும் பயன்படுத்தக்கூடாது என்று வழக்கு தொடர்ந்தார். அந்த பழைய வழக்கு தான் இப்போது வந்திருக்கிறது. விஜய்க்கு என் மீதுள்ள கோபம் குறைய வேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்? அவரது பதிலுக்காக காத்திருக்கும் ஒரு பாசக்கார அப்பா’’என எஸ்.ஏ.சந்திரசேகர் உருகியுள்ளார்.