நெஞ்சைப் பிழியும் கொடூர கஜா புயல் செய்திகளுக்கு மத்தியில் சிறிய ரிலாக்ஸ் தேவைப்படுகிறது என்று நினத்தோ அல்லது சீரியஸான எண்ணத்திலோ சதீஷ்குமார் பரமேஸ்வரன் என்றொரு புண்ணியவான் கஜா புயல் குறித்து இப்படி ஒரு விபரீதமான செய்தியை முகநூலில் மிகத்தீவிரமாகப் பரப்பிவருகிறார்.

"பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நூலைப் பற்றி தெரிந்தவர்கள் இதை நம்பித்தான் ஆகவேண்டும்.
ஏகாதிபத்திய கைக் கூலிகளாக இங்கே அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் மாறி பல காலம் ஆகி விட்டது’ என்று இவரை ஆதரித்து சிலரும்...

இவ்வளவு திறமையான கதாசிரியர்கள் தமிழகத்தில் இருக்கும் போது 
நம் இயக்குனர்கள் ஏன் கொரிய ஈரானிய ஹாலிவுட்‌படங்களை காப்பியடிக்க வேண்டும்  என்று இவரை ஓட்டி சிலரும் பின்னூட்டங்கள் இட்டு வருகிறார்கள்...

இதோ அந்த பதிவு...

கஜா புயல் இயற்கையாக நடந்தது அல்ல...

ஹார்ப் (HAARP – High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும். இதைப் பயன்படுத்தி வல்லாதிக்க நாடுகளால் இயற்கைக்கு மாறாக உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது...

இதோ HAARPஐப் பற்றி அறிந்து கொள்ள கீழே காணும் லிங்க்-களை பாருங்கள்...ஆனால் இதெல்லாம் எதற்காக என நீங்கள் கேட்கலாம்...

நமது டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்து, மீத்தேன் வாயு, ஹைட்ரோ கார்பன் திட்டம், போன்ற அழிவுத் திட்டங்களை திணிக்க நினைத்த அவர்களின் கனவுகளை கடுமையான போராட்டங்களின் வாயிலாக நம் மக்கள் தடுத்து தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்...

அதற்கு பதிலடியாகத்தான் வல்லாதிக்க நாடுகள் இத்தகைய பருவநிலை மாற்ற இரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது...இதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என நீங்கள் கேட்கலாம்...

புயலினால் விவசாயம் அழிந்தால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்...வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டால் மக்கள் விவசாயத்தை விட்டு விடுவர்...
விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்படும்...

கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மத்திய அரசு தனது விருப்பம் போல மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவுத் திட்டங்களைக் கொண்டு வருவார்கள்...இந்த ஒப்பந்தத்தால் தோராயமாக மத்திய அரசிற்கு கிடைக்கும் கமிஷன் வருமானம் 5000கோடி, ஒப்பந்தம் இடுகிற வல்லாதிக்க நாடுகளின் வருவாய் 5 இலட்சம் கோடி...

தமிழக மக்களுக்கு தெருக்கோடி...