R.Sundhararajan talk about rajinikanth style

தமிழ் சினிமாவை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்ற படைப்புகளில் மிக முக்கியமானது ‘பயணங்கள் முடிவதில்லை’. இன்று சொல்லப்படும் பிளாக்பஸ்டர் ஹிட், பாக்ஸ் ஆபீஸ் தெறிக்குது!...போன்ற வார்த்தைகளெல்லாம் இந்த படத்தின் பேய்த்தனமான வசூலை விவரிக்கவே முடியாது. இதன் இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன். சமீப காலமாக காமெடி மற்றும் குணசித்திர நடிகராக அறியப்பட்டிருக்கும் இவர் ஒரு காலத்தில் மிக பெரிய வெற்றி இயக்குநர். 

ரஜினிகாந்தை வைத்து இவர் கொடுத்த ‘ராஜாதி ராஜா’ ஒரு டிரெண்ட் செட்டராகவே மாறிய படம். இப்பேர்ப்பட்ட சுந்தர்ராஜன் சமீபத்தில் சமகால சினிமாவையும், தன் கால சினிமாவையும் கம்பேர் செய்து சில வாக்கியங்களை பேசியிருக்கிறார். 
அப்போது ரஜினியின் பர்ஃபார்மென்ஸை சிலாகித்திருக்கிறார். தனக்கே உரித்தான கோவை ஸ்டைலில் ‘’ஒரு ஃபைட் சீன் வைக்கோணுமுன்னா அந்த ஹீரோ அதுக்கு பொருந்துவாரான்னு முதல்ல பாக்கணும். ரஜினிகாந்த் சட்டுன்னு திரும்பி முறைச்சாலே பத்து பேர் விழுற மாதிரி எடுக்கலாம்! காரணம், அவரோட கண்ணுக்கு அந்த பவர் இருக்குது. அவர் முறைச்சா எடுபடும். ராஜாதி ராஜா படத்துல ஒரு ஃபைட் சீன்ல ‘நீங்க பத்து பேர் என்னைய அடிச்சீங்க ஆனா ஒரு அடி கூட என் மேலே படல. ஆனா நான் இப்போ உங்களை அடிக்கிறேன் ஆனா ஒரு அடி கூட மிஸ்ஸாகாது’ன்னு சொல்லிட்டு போட்டு புரட்டியெடுப்பார் பாருங்க. தியேட்டர்ல விசில் கிழியும். ” என்று சொன்ன ஆர்.எஸ்.ஆர். தொடர்ந்து...

”அதே படத்துல அவரு கத்தியை சுத்திவிடுவாரு, அது தனியா சுத்தும். ஆனா இதே கத்தியை நம்ம நடிகர் மோகனுக்கு வெச்சா எடுபடுமா? அவருக்கு மைக்தான் கரெக்ட். அவரு கையில கத்திய விட்டு சுத்தவிட்டா கைதட்டமாட்டாங்க, என் முதுகுலதான் தட்டுவாங்க. 

ரஜினியோட கண்ணே அந்த காட்சியின் அர்த்தத்தை, கதையை சொல்லிடும். சண்டைக்காட்சின்னா அவர் கிட்டே ஒரு ரப்னஸ் இருக்கும். 

சின்னப்பா தேவர் கூடத்தான் சிலம்பத்துல எல்லா வித்தைகளையும் கத்து வெச்சிருந்தாரு. ஆனா எம்.ஜி.ஆர். அவரை விட கம்மியாதான் கத்து வெச்சிருந்தார். ஆனா கம்பை தேவர் எடுத்து சுத்துற அழகை விட எம்.ஜி.ஆர். சுத்துறப்பதான் அழகு பிய்ச்சிக்கும், ரசிகன் துள்ளுவான். 

ஆக ஒரு நடிகன் ஹீரோவாகணும்னா அவனோட உடல் மொழி கச்சிதமா அமையணும்.” என்று நெத்தியடியாக சொல்லியிருக்கிறார். 

அப் கம்மிங் ஹீரோஸ் இதையெல்லாம் அப்டேட் பண்ணிக்கோங்க ப்ரோஸ்!