Asianet News TamilAsianet News Tamil

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு.. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்..!

கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் , ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. தமிழ்நாட்டில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்து,  இதர 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

RSS Rally Case.. Chennai High Court quashed the order of single judge..!
Author
First Published Feb 10, 2023, 11:46 AM IST

சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் அணிவகுப்பு நடத்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்து இதர 44 இடங்களில் நிபந்தனைகளுடன் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மறுக்கப்பட்டது. 

RSS Rally Case.. Chennai High Court quashed the order of single judge..!

இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் 45  மேல் முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, சுற்றுச்சுவருடன் கூடியப்மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

RSS Rally Case.. Chennai High Court quashed the order of single judge..!

மேலும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த விண்ணப்பங்கள் மீது ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios