விவசாயிகளின் நலனை மேம்படுத்த அவர்களுக்கு கடன் அளிக்கவும், கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை தடை செய்த அறிவித்தபின், ஏறக்குறைய 50 நாட்களுக்கு பின் பிரதமர் மோடி நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் விவசாயிகளுக்கான திட்டம் குறித்துக் கூறுகையில், “ நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனுக்கான இந்த அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

அவர்களின் முன்னேற்றத்துக்காகவும், கடன் வழங்கவும், கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த கடன் அனைத்தும் கூட்டுறவு வங்கிகள் மூலம் அளிக்கப்படும். 


விவாசாயிகளிடம் உள்ள கிசான் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் ரூபே கார்டுகளாக மாற்றப்படும். அடுத்த 3 மாதங்களில் 3 கோடி கிசான் கிரெடிட் கார்டுகள், ரூபே கார்டுகளாக மாற்றப்படும். 3 மாதத்தில் 3 கோடிகீசான் கிரிடெட் கார்டுகள் ரூபே கார்டுகளாக மாற்றப்படும்.

இந்த ஆண்டு ராபி பருவத்தில் கூடுதலாக 6 சதவீதம் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர், வழக்கத்தைக்காட்டிலும் 9 சதவீதம் உரங்களைப் பயன்படுத்தியுள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.