தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்போவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்பேரில் இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதையொட்டி சில இடங்களில் மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை. ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தொழில் நகரமான கோவையில் சிறு,குறு தொழில் நிறுவனங்களின் வேலை நிறுத்தத்தால் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விவாசாயிகளுக்கு ஆதரவாக 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. அறிவிப்பின்றி சில பெரிய நிறுவனங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.