முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புபடி, தமிழகத்தில் உள்ள அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்குவதற்காக, ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை சேலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களான 2.6 கோடி பயனாளிகளுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசு, ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். வீடு வீடாக வந்து டோக்கன்‌ கொடுக்கப்பட்டு, ஜன.,4ம் தேதி முதல் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படும் என்றும், ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைகளுக்கும்‌ பொங்கல்‌ பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியுடன்‌, ஒரு துண்டு கரும்புக்குப்‌ பதிலாக முழு கரும்பு வழங்கப்படும்‌, என அறிவித்தார்.

இந்நிலையில், அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ. 2,500 வழங்க, மொத்தம் ரூ. 5,600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.