மருத்துவமனகளில் நடக்கும் கொள்ளை இன்னும் அதிகம் என்கின்றனர். இத்தனைக்கு இறந்த பின்னர் நிம்மதியாக தங்களது உறவினர்களின் பிணத்தின் இறுதிச் சடங்கை நடத்த இன்னும் இன்புறுகின்றனர் மக்கள்.
கொரோனா தொற்று பெரும் அவலமாய் மாஇ வருகிறது. உலகமெங்கும் அவல ஓலம் பெருங்குரலெடுத்து ஒலிக்கிறது. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் பல்லாயிரக்கணக்காணோர் உயிரிழ்ந்து வருகின்றனர். இறந்தவர்களை எரிக்க இடமின்றித் தவிக்கின்றனர். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை உடனடியாக எரியூட்ட, 25 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
கர்நாடகாவில் நாள்தோறும் சுமார் 20 ஆயிரம் பேர், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல், கொரோனா உயிரிழப்புகளும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூருவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்ட, மின் மயானத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

