திமுக பெண் தொண்டர் ஒருவர் தன்னந்தனியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். திமுக கொடியை கையில் ஏந்திச் செல்லும் அந்த பெண், சாலையில் வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.  திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பேரணி நடத்த முயன்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டார். அதே போன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்ட வருகின்றனர்.

இந்த நிலையில்  திமுக தலைமை நிலைய செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் வேலூர், காட்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார். காவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், வேலூரில் பெண் திமுக தொண்டர் தன்னந்தனியாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார். கையில் திமுக கொடியுடன் சென்ற அவர், சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்தை தனியாக சென்ற அந்த பெண், பேருந்தை நிறுத்தியுள்ளார். திமுக பெண் தொண்டரின் இந்த துணிச்சலைப் பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.