Asianet News TamilAsianet News Tamil

முடிந்தது முதல் சுற்று - 2,601 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை.... பூரிப்பில் சசி கேங்...! 

RK Nagar is the seat of independent candidate DTV Dinakaran at the end of the first round of the vote count by 3053 votes.
RK Nagar is the seat of independent candidate DTV Dinakaran at the end of the first round of the vote count by 3,053 votes.
Author
First Published Dec 24, 2017, 9:01 AM IST


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றின் முடிவில் 2,601வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன்  முன்னிலையில் உள்ளார். 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர்  21ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என ராவும் பகலும் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

இதையடுத்து கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி சொன்னபடி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெற்று முடிந்தது.  தேர்தலை முறைப்படி நடத்த 15 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவப்படை பாதுகாப்புக்காக வந்திருந்தது. 

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். 1,638 வாக்குச் சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

ஓட்டுப்பதிவு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 

இதில், முதல் சுற்றின் முடிவில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 2,601 வாக்குகள் வித்தியாசத்தில் 5339 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

இரண்டாம் இடத்தில் 2,738வாக்குகள் பெற்று அதிமுகவை சேர்ந்த மதுசூதனன் உள்ளார். மூன்றாம் இடத்தில் 1181 வாக்குகள் பெற்று திமுக மருதுகணேஷ் உள்ளார்.  

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு கருத்து கணிப்புகளும் டிடிவி தினகரன் தான் வெற்றி பெறுவார் என கூறியது குறிப்பிடதக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios