rk nagar election results nota get more votes than bjp



ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

இதில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். 

முதலிடத்தில் தினகரனும், இரண்டாமிடத்தில் அதிமுகவும், மூன்றாம் இடத்தில் அனைத்துக் கட்சிகள் அணைத்துக் கொண்ட திமுக.,வும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், வெகு சுவாரஸ்யமாக சொல்லி அடித்த நாம் தமிழர் கட்சி, பாஜக.,வை முந்தி நான்காம் இடத்தில் வந்து கொண்டிருக்கிறது. ஐந்தாம் இடத்தில் பாஜக., வரும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில்,  பாஜக,வை ஆதரித்து ஓட்டுப் போட்டவர்களை விட, யாருக்கும் ஓட்டளிக்க விருப்பமில்லை  என்று கூறும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்துள்ளன. இது ஆர்.கே.நகர் தேர்தலின் ஆச்சரியங்களில் ஒன்றாகவே திகழ்கிறது.