rk nagar 2nd round end ttv dinakaran got 5900 votes than admk madhusudanan

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று காலை முதலே கட்சியினர் பலரும் குவிந்தனர். 

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே, சுயேச்சையாகப் போட்டியிடும் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். முதலிடத்தில் தினகரனும், இரண்டாமிடத்தில் அதிமுகவும், மூன்றாம் இடத்தில் பல கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக.,வும் வந்து கொண்டிருக்கின்றன.

இதில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில்

1. டிடிவி தினகரன் (சுயேச்சை) - 10421

2. மதுசுதனன் (அதிமுக) - 4521

3. மருது கணேஷ் (திமுக) - 2324

4. கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 267 

5. கரு.நாகராஜன் (பாஜக) - 66


ஆகியோர் வாக்குகள் பெற்றுள்ளனர்.