ஜெயலலிதாவை தான் பார்க்கும்போது சுயநினைவுடனேயே இருந்தார் என சென்னைக்கு வந்து பரபரப்பாக பேட்டியளித்தார் அவருக்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலே.

செப் 22ஆம் தேதி நீர்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அப்போலோவில் அனுமதிக்கபட்டார் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா.

அவருடைய உடல்நலம் குறித்து தினம் அறிக்கையை அப்போல்லோ மருத்துவமனை வெளியிட்டாலும் ஒரு புகைப்படமோ வீடியோ காட்சியோ வெளியிடவில்லை.

இது அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இருப்பினும் ஜெயலலிதா குணமடைந்து வந்து விடுவார் என்று நம்பி கொண்டிருந்தவர்களுக்கு அவரது மரண செய்திதான் வந்தது.

இதனையடுத்து கொந்தளிப்பு மேலும் அதிகமாய் போனது.

ஜெ. மரணத்தில் மர்மம் நீடிப்பதாக பலரும் தொடர்ந்து கூறி வந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை மீண்டும் அழைத்து வந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

அதில் தான் சிகிச்சை அளிக்கும்போது ஜெயலலிதா சுய நினைவுடன் இருந்ததாகவும் ஒரு கட்டத்தில் சுவாச குழாய் பொருத்தப்பட்ட பிறகு ஜெயலலிதா செய்கைகள் மூலமாக பேசினார் என்றார்.

ரத்த அழுத்தம், சக்கரை நோய் காரணமாக அவருக்கு நோய் வேகமாக பரவியது.

செப்ஸில் என்னும் நோய் தொற்று தொடர்ந்து உயர்ந்து வந்ததாக ரிச்சர்ட் பீலே தெரிவித்தார்.

மேலும் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் பீலே தெரிவத்தார்.

ஜெயலலிதா சுயநினைவோடு தான் இருந்தார் என்றும் ரிச்சர்ட் பீலே மீண்டும் தெரிவித்தார்.