தாலுக்கா ஆபிசுக்கு மாறுவேடத்தில் சென்ற வருவாய் ஆணையர்.. கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்.. சஸ்பெண்ட்.

பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்ட மதுரவாயில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்துள்ளார். 

Revenue Commissioner who went to the taluk office in disguise .. Officers caught red handed .. Suspended.

பொதுமக்களிடம் அலட்சியமாக நடந்து கொண்ட மதுரவாயில் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்துள்ளார். மக்களோடு மக்களாக வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் போன்ற பொது நிர்வாக பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டின் மூலம் வருவாய்த்துறை செயல்பட்டு வருகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு செயல்படுத்தும் அத்தனை திட்டங்களும் பொது மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றி வருகிறது. பொதுமக்களுக்கு சட்டப்படி நேர்மையாக கிடைக்க வேண்டிய அனைத்து சேவைகளையும் எவ்வித குறைகளுமின்றி, தாமதமின்றி நேர்மையான முறையில் அவர்களுக்கு கிடைத்திட வேண்டும் என தமிழக முதலமைச்சர் அத்துறைக்கு ஆணை பிறப்பித்துள்ளார். இதேபோல் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அத்துறை அமைச்சர், மக்களுக்கு தாமதமின்றி நேர்மையான முறையில் சேவையை உறுதி செய்தின வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்.

Revenue Commissioner who went to the taluk office in disguise .. Officers caught red handed .. Suspended.

இந்நிலையில் அண்மை காலமாக வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில்  மக்கள் அலைக்கழிக்கப் படுவதாகவும், மக்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டே அவர்களிட் தேவைகள் செய்து தரப்படுவதாகவும் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரின் உத்தரவின்படி வருவாய்த்துறை உயர் அலுவலர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி நேரடியாக களத்தில் ஆய்வுசெய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையருக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுரவாயில் வட்டாட்சியல் அலுவலகத்திற்கு மக்களோடு மக்களாக தனியார் ஊர்தியில் சென்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர், அங்கு கல ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு அதிகாரிகள் பொதுமக்களிடம் தன்மையாகவும், கனிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளாமல் மிகவும் அலட்சியமாகவும் பொதுமக்களிடம் கையூட்டு பெற்றும் அவர்களை தொந்தரவு செய்யும் வகையிலும் நடந்து கொண்டதை கண்டறிந்தார்.

Revenue Commissioner who went to the taluk office in disguise .. Officers caught red handed .. Suspended.

உடனடியாக சம்பந்தப்பட்ட மதுரவாயல் வட்டாட்சியர்( திரு முரளி) வருவாய்  ஆய்வாளர் (சோபியா) ஆகியோரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து ஆணையிட்டார்.  அதேபோல அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் தங்களது  மாவட்ட வருவாய் அலுவலகங்களில் நேரடியாக கள ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்களை கண்டறிந்து பொது மக்களுக்கு  நியாயமான சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருவாய் ஆணையர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios