Asianet News TamilAsianet News Tamil

கைமீறிய கொரோனா.. கட்டுப்பாடுகள் கடுமையாகிறது..? ஊரடங்கு அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது..???

மேலும், பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  
இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கல்வி நிலையங்களுக்கான கட்டுப்பாடுகள், கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த கருத்துகளை மருத்துவ வல்லுனர்கள் முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Restrictions are tightening .. There is no other way but to curfew. ?? Important announcement to be released.
Author
Chennai, First Published Jan 4, 2022, 12:54 PM IST

இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கல்வி நிலையங்களுக்கான கட்டுப்பாடுகள், கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த கருத்துகளை மருத்துவ வல்லுனர்கள் முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்குவது தொடர்பாகவும் இரவு நேர ஊடரங்கு பொன்ற அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த வைரசால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து தப்பிக்க முடியும் என்ற முடிவுடன் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந் நிலையில் இந்தியா ஒன்றுக்கு நான்கு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. அதில் இரண்டு தடுப்பூசிகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்துவருகிறது. தடுப்பூசிகள் அனைத்தும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.  ஆனால் கொரோனா வைரஸ் என்பது அடிக்கடி உருமாறி, அடுத்தடுத்து படிநிலைகளில் தன்னை தகவமைத்து வருகிறது. எனவே இதை முழுவதுமாக கட்டுப்படுத்துவது விஞ்ஞானிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது.

Restrictions are tightening .. There is no other way but to curfew. ?? Important announcement to be released.

இந்தியாவில் டெல்டாவகை வைரசாக உருமாறிய கொரோனா இரண்டாவது அலையாக உருவெடுத்தது. அதனால் மிகப்பெரிய உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டது. தற்போது  தென்னாப்பிரிக்காவில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான்வகை வைரஸ் 12 நாடுகளுக்கும் அதிகமாக பரவி உள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இது சமூக பரவலாக மாறிவிட்டது என்றும் கூறப்படுகிறது. அதாவது சென்னையில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு ஒரு மைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அவர் எந்த வெளிநாட்டு தொடர்பு இல்லாதவர். ஆனால் அவருக்கு எப்படி ஒமைக்ரான் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் செவிலியர்கள், உட்பட 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது சமூக பரவலாக மாறி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையின் தினசரி கொரோனாத் தொற்று  கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் மட்டும் 51% அதிகரித்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அதனால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Restrictions are tightening .. There is no other way but to curfew. ?? Important announcement to be released.

தமிழ்நாட்டில் தினசரித் தொற்றுகளின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு நாளில் மட்டும் 120 ஆக பதிவானது, அதாவது 19.38% அதிகரித்திருக்கிறது. சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இவற்றில் 9 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சென்னையில் தினசரித் தொற்று இரட்டிப்பாகி உள்ளது. நீண்ட நாளுக்கு பிறகு தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு 1700 கடந்துள்ளது சென்னையில் 876 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு  27,52,856 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஓமைக்ரான் நுழைந்தது முதல் அரசு நிம்மதி இழந்துள்ளது. ஒமைக்ரானால் கொரோனா தாக்கம் வேகமெடுத்துள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைப்பெற்றது. ஆலோசனை கூட்டத்தில்  தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். உருமாறிய ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்டம் வாரியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதோடு, மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புகளை கடுமையாக்குவது, பரிசோதனைகளை அதிகரிப்பது, அபராதம் விதிப்பது, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Restrictions are tightening .. There is no other way but to curfew. ?? Important announcement to be released.

மேலும், பொங்கல் பண்டிகைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  
இரவு நேர ஊரடங்கு, வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, கல்வி நிலையங்களுக்கான கட்டுப்பாடுகள், கடைகளுக்கான நேரக் கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்த கருத்துகளை மருத்துவ வல்லுனர்கள் முன் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே நாளை முதல்  இரவு நேர ஊரடங்கு, மற்றும் வணிகவாளாகங்களுக்கு கட்டுப்பாடு, கடைகள் மற்றும் உணவகங்களுக்கு நேர கட்டுப்பாடு, வழிபாட்டு தளங்களுக்கு வெள்ளி,சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களுக்கு வழபாட்டுக்கு அனுமதி மறுப்பு போன்ற கட்டுப்பாட்டுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது ஒரு சில தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கபடுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios