Asianet News TamilAsianet News Tamil

பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம்...! சட்டப்பேரவையில் ஸ்டாலின் அதிரடி..

தமிழக சட்டப்பேரவையில் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக அரசின் தனித் தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது. இதில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என்று அரசின் தனி தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Resolution in the Tamil Nadu Legislative Assembly against the general entrance examination
Author
Tamilnadu, First Published Apr 11, 2022, 11:01 AM IST

கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு

பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்லூரிகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற புதிய தேசியக் கல்விக் கொள்கை குழுவின் வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரை செய்துள்ளது. நுழைவுத்தேர்வானது, அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் சேர்வதற்கு நடத்தப்படும் எஸ்.ஏ.டி தேர்வுகளுக்கு இணையானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொது நுழைவு தேர்வுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து 
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளி கல்விதுறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. முன்னதாக இந்தநிலையில் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராக அரசின் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்யவுள்ளார்.

Resolution in the Tamil Nadu Legislative Assembly against the general entrance examination

மாநில பாட திட்ட மாணவர்களுக்கு சமவாய்ப்பு வழங்காது

இந்த தீர்மானத்தில் "மத்திய  அரசின்கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு, 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், அம்மானியக் குழுவின் நிதியுதவியுடன் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள் தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு  மூலம் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. +2 தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் எனவும், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் மாணவர்கள் சேர்க்கையை நடத்திக் தெரிவித்துள்ளது. கொள்ளலாம் என்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு நுழைவுத் தேர்வும், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை வழங்கிடாது என்று இப்பேரவை கருதுவதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Resolution in the Tamil Nadu Legislative Assembly against the general entrance examination

நுழைவுத் தேர்வினை ரத்து செய்ய வேண்டும்

மேலும்  பெரும்பாலான மாநிலங்களில்,  80 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர்கள்  மாநிலப் பாடத்திட்டங்களில் பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப் பிரிவினரைச் சேர்ந்தவர்களாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, NCERT பாடத்திட்ட அடிப்படையிலான நுழைவுத் தேர்வு மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குத் தகுதியான பெரும்பான்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்துவதோடு,  இந்தச் சூழ்நிலை நம் நாட்டிலுள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் இணைப்புக் கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் என்றும் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நுழைவுத் தேர்வும், நீட் தேர்வைப் போன்றே நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிக் கல்வி முறைகளை ஓரங்கட்டி, பள்ளிகளில் நீண்ட காலக் கற்றல் முறைகளை வெகுவாகக் குறைத்து மதிப்பிட வழிவகுப்பதோடு, பாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க பயிற்சி மையங்களைச் சார்ந்திருக்கும் ஒரு சூழலை ஏற்படுத்திவிடும் என்பதில் ஐயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர் மட்டுமே இது சாதகமாக அமையும் என்று தமிழக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இவ்வாறு ஒரு நுழைவுத் தேர்வினை செயல்முறைக்கு கொண்டு வருவதால், பள்ளிக்கல்வியோடு பயிற்சி மையங்களையும் நாடும் இளைய மாணவ சமுதாயத்தினர் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாநில அரசுகளின் உரிமையினை நிலை நாட்டும் பொருட்டு மத்திய பல்கலைக்கழகங்களில் பல்வேறு படிப்புகளில் சேர்வதற்காக நடத்தவிருக்கும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை இரத்து செய்திட ஒன்றிய அரசினை இப்பேரவை வலியுறுத்துகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios