Asianet News TamilAsianet News Tamil

மாநில அரசு பணியிடங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை..!! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!! அதிர்ச்சியில் எஸ்சி

உத்ரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி, மாநில அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், அரசு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை ரத்து செய்து ,குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டது.
 
Reservation is not mandatory in the state government workplace .. !! Supreme Court Action Ruling .. !! SC in shock
Author
India, First Published Feb 10, 2020, 7:47 AM IST

மாநில அரசு பணி நியமனங்களில் இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை, பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்திருக்கிறது. இந்த தீர்ப்பு எஸ்.சி.எஸ்.டி பிரிவினறுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

Reservation is not mandatory in the state government workplace .. !! Supreme Court Action Ruling .. !! SC in shock

உத்ரகாண்ட் மாநிலத்தில் விஜய் பகுகுணா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, 2012-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5-ந் தேதி, மாநில அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், அரசு காலி பணியிடங்களை நிரப்ப முடிவு எடுத்து உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை எதிர்த்து உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உத்தரவை ரத்து செய்து ,குறிப்பிட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் உத்தரகாண்ட் அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா அமர்வு விசாரித்தது.

Reservation is not mandatory in the state government workplace .. !! Supreme Court Action Ruling .. !! SC in shock

விசாரணை முடிவில், “இந்த நீதிமன்றம் வகுத்துள்ள சட்டத்தை கருத்தில் கொண்டு மாநில அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பதவி உயர்வில் இடஒதுக்கீடு கேட்பதற்கு எந்தவொரு தனி நபருக்கும் உள்ளார்ந்த எந்த அடிப்படை உரிமையும் இல்லை” என அதிரடி தீர்ப்பு அளித்திருக்கிறது. அதன் தீர்ப்பு பின்வருமாறு.. 

"அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட முடியாது என்பது முடிவான சட்டம் ஆகும். இதேபோன்று பதவி உயர்வுகளிலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க, மாநில அரசுகள் கட்டுப்படத் தேவை இல்லை.இருப்பினும், அரசு தனது விருப்புரிமை படி செயல்பட விரும்பினால், அத்தகைய  அரசு பணிகளில் அந்த சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் போதாது என்பதை காட்டுவதற்கான புள்ளிவிவரங்களை சேகரிக்க வேண்டும்.

Reservation is not mandatory in the state government workplace .. !! Supreme Court Action Ruling .. !! SC in shock

உத்தரகாண்ட் அரசு 2012-ம் ஆண்டு செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவு செல்லும். மாநில அரசின் உத்தரவு சட்டவிரோதம் என்று ஐகோர்ட்டு கூறி இருக்கக் கூடாது. பணியிடங்களை நிரப்புவதிலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம்.

மாநில அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் பிரதிநிதித்துவம் போதாது என்று மாநில அரசுகள் கருதி, அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால் அதற்கு அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு 16(4) மற்றும் 16 (4-ஏ) அதிகாரம் வழங்கி உள்ளது.இந்த சட்டப்பிரிவுகள், பிரதிநிதித்துவத்தின் போதாமை என்பது மாநில அரசின் திருப்திக்கு உட்பட்ட விஷயம் என்பதை தெளிவுபடுத்தி உள்ளன. அதே நேரத்தில், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க விரும்பினால், இடஒதுக்கீட்டில் கருத்து உருவானதின் அடிப்படைக்கு சான்றுகள்  இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TBalamurukan

Follow Us:
Download App:
  • android
  • ios