கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். 
கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான 10 பேர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்களான தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.