கொரோனா பாதிப்பு நிவாரணமாக தமிழ்நாட்டில் ரேசன் அட்டை தாரர்களுக்கு தலா1000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டிலும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. பலர் வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். கொரோனா தமிழ்நாட்டிலும் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிவாரணமாக தமிழ்நாட்டில் ரேசன் அட்டை தாரர்களுக்கு தலா1000 வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ 3250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்