கோயம்பேடு சந்தையில் சில்லரை வணிகத்தை தடை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து கட்டுப்பாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு பேரவையினர் வலியுறுத்தி உள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில், தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் வணிகர்கள் மனு அளித்தனர்.  

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைப்பின் தலைவர் சவுந்தரராஜன், வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணிந்து மட்டுமே வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என்ற அறிவிப்புகள் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அலட்சியப்படுத்தி வருவகின்றனர். அதற்கு நிறுவன உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். 

மேலும், வணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி  வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நோய்த்தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், கோயம்பேடு சந்தையில் சில்லரை வணிகத்தை தடை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து கட்டுப்பாடுகளுடன் வணிகம் செய்ய அனுமதி தர வேண்டும், இதே போல மாநிலம் முழுவதும் உள்ள காய்கறி அங்காடி பகுதிகளில் சில்லரை வணிகத்தை தடை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்து கட்டுப்பாடுகளுடன் வணிகம் செய்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.