Asianet News TamilAsianet News Tamil

கழகத்திற்குள் கலகம்... மு.க.ஸ்டாலினிடம் கொந்தளித்த திருச்சி சிவா..!

கட்சியில் தனக்கே உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற கவலையில் இருக்கும் அவர், ஒரு சீனியரின் மனக்குமுறலாக இதனை ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்.

Rebellion within the League ... Trichy Siva in turmoil with MK Stalin
Author
Tamil Nadu, First Published Sep 14, 2020, 1:52 PM IST

பொதுக்குழுவிற்கு பிறகு திமுக, ஏறத்தாழ ஒரு யுத்தகளம் போலவே காட்சியளிக்கிறது. திமுகவின் சீனியர் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவா, மிகச் சிறந்த பேச்சாளர். திமுக நிகழ்ச்சிகளில் சிவாவின் பேச்சைக் கேட்பதற்கென்றே தனியாகக் கூட்டம் கூடும். இதன் காரணமாகவே அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்ந்து பரிசளிக்கப்பட்டு வருகிறது. என்னதான் எம்.பி ஆக இருந்தாலும் கட்சிக்குள்ளும் ஒரு வலுவான பதவி இருந்தால் நன்றாக இருக்குமே என்கிற எண்ணம் சிவாவிற்குள் அண்மைக்காலமாகவே சிறகடித்திருக்கிறது. இதை தலைமைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தெரியப்படுத்தியும் இருக்கிறார். ஆனால் எவ்வித ரெஸ்பான்சும் இல்லை.Rebellion within the League ... Trichy Siva in turmoil with MK Stalin
 
இந்த நிலையில்தான் திருச்சி வட்டாரத்தைச் சேர்ந்த கே.என் நேரு தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக சமீபத்தில் பதவி உயர்வு பெற்றார். சிவாவிற்கும், நேருவிற்கும் ஏற்கனவே ஏழாம் பொருத்தம் என்கிற நிலையில் இது சிவாவின் ஈகோவை ரொம்பவே உரசிப் பார்த்திருக்கிறது. ‘’பணம் இருந்தால்தான் பதவியா? கட்சிக்காக உழைத்தது, தியாகம் செய்தது எல்லாம் வீண் தானா!’’என ஆதரவாளர்களிடம் அப்போதே கொதித்திருக்கிறார்.
போதாதக்குறைக்கு அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுவின்போது அதே திருச்சி வட்டாரத்தைச் சேர்ந்த அ.ராசா துணைப் பொதுச் செயலாளராகவும், திருச்சியை அடுத்த டெல்டா பிரதேசத்தைச் சேர்ந்த டி.ஆர்.பாலு பொருளாளராகவும் பதவி உயர்வு பெற, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாராம் சிவா.Rebellion within the League ... Trichy Siva in turmoil with MK Stalin

‘’நேருவும், ராசாவும் கட்சியில் என் சீனியாரிட்டிக்கு முன் எம்மாத்திரம்? இருவரும் எம்.எல்.ஏ, எம்.பிக்கள்தான். ஆனால் அதைத் தாண்டி வலுவான கட்சிப் பொறுப்புகள் தரப்படுகின்றன. டி.ஆர் பாலுவுக்கும் அப்படியே. இந்த நிலையில் எனக்கு  வெறும் எம்.பி பதவி மட்டும்தானா!’’என கனிமொழியியிடம் கொதித்திருக்கிறார்.  கட்சியில் தனக்கே உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற கவலையில் இருக்கும் அவர், ஒரு சீனியரின் மனக்குமுறலாக இதனை ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார்.

Rebellion within the League ... Trichy Siva in turmoil with MK Stalin

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஸ்டாலின் உடனடியாக சிவாவை தொடர்புகொண்டிருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் எகிறிய சிவா தனது ஆதங்கத்தை 10 நிமிடங்களுக்கு மேலாகக் கொட்டித் தீர்த்திருக்கிறார். ‘’கட்சி பதவி அளிக்க என்னிடம் என்ன தகுதிக் குறைபாடு?’’என்கிற சிவாவின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறியிருக்கிறார் ஸ்டாலின். இறுதியாக, ‘’நான் சுயமரியாதைக்காரன் என்பது உங்களுக்கே தெரியும். எனது சீனியாரிட்டிக்கு ஏற்றபடி கட்சியில் நல்லதொரு பதவி அளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு’’என சிவா கறாராக சொல்ல, வேறு வழியின்றி அப்போதைக்கு தலையாட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

Follow Us:
Download App:
  • android
  • ios