கலைஞர் கருணாநிதி இறந்து நேற்றோடு 30 நாட்கள் ஆகி இருக்கிறது. இந்த 30வது நாள் அன்று கலைஞருக்காக ஒரு மாபெரும் இரங்கல் ஊர்வலத்தை நடத்தி காட்டுவேன் என அறிவித்திருந்த அழகிரி, வெற்றிகரமாக இந்த பேரணியை நடத்தி காட்டவும் செய்திருக்கிறார். திமுகவில் இருந்து கலைஞரு உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே அழகிரி விலக்கப்பட்டாலும் இன்னும் அவருக்கு என ஒரு கூட்டம் திமுகவில் இருக்க தான் செய்கிறது என்பதை அழகிரி இந்த பேரணியின் போது நிரூபித்து காட்டி இருக்கிறார். 

எப்படியாவது மீண்டும் திமுகவில் இணைந்து விட வேண்டும் என்பதற்காக தான் அவர் இதை எல்லாம் செய்து வருகிறார் என்பதை அறிந்த பிறகும் கூட தொடர்ந்து அமைதி காத்து வருகிறது ஸ்டாலின் தரப்பு.

அழகிரியும் முதல் கட்டமாக திமுக உடைந்துவிடும் என மிரட்டி பார்த்தார். அந்த மிரட்டலை யாரும் கண்டு கொள்ளாமல் இருந்துவிடவே கடைசியில் சமாதனம் ஆகி ஸ்டாலினை தலைவராக ஏற்க தயார் , என்னை கட்சியில் மீண்டும் சேர்த்து கொண்டால் கட்சிக்காக பாடுபடுவேன என சரண்டர் ஆகியும் பார்த்தார். 

ஆனால் எதற்கும் அசைந்து கொடுக்காமல் அமைதி காத்து வருகிறார் ஸ்டாலின். இதை எல்லாம் தாண்டி தான் சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட வேண்டும் என்ற நோக்கில் நேற்றைய தினத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டி மக்கள் மத்தியில் தனக்கான இடம் எனன்? தொண்டர்கள் மத்தியில் தனக்கான பலம் என்ன என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் அழகிரி.

தஞ்சாவூர், மதுரை , நெல்லை, கோவை, என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து குவிந்த தன் ஆதரவாளர்களுடன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தொடங்கி , கலைஞர் சமாதி வரை இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார் அஞ்சா நெஞ்சர். தந்தைக்காக மகனின் சமர்ப்பனம் இது என்பதால் பேரணி தொடங்கும் இடத்தில் இருந்து கலைஞரின் சமாதி வரை உள்ள பாதையை பிரம்மாண்டமாக தோரணையாக அலங்கரித்து, உலக புகழ் பெற்ற மதுரை மல்லிகைப்பூ , மற்றும் பல விலை உயர்ந்த பூக்களை விமானம் மூலம் வரவழைத்து, கலைஞரின் சமாதியை அழகுபடுத்தி , ஒவ்வொரு ஏற்பாடையும் நுணுக்கமாக செய்து அஞ்சலி செலுத்தி இருக்கிறார் அழகிரி.

அழகிரி நேற்று இந்த பேரணியை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமிதத்தில் திருப்தியாக அங்கிருந்து சென்ற பிறகு, கலைஞரின் சமாதிக்கு வருகை தந்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கலைஞரின் மறைவிற்கு பிறகு 30 வது நாள் என்பதால் தான் அவர் வந்திருந்தாலும் , அழகிரி அஞ்சலி செலுத்திய பிறகு ஸ்டாலின் இந்த வருகையை நிகழ்த்தி இருப்பது தற்போது கூடுதல் கவனத்தை பெற்றிருக்கிறது.

கலைஞரின் சமாதிக்கு தன் மனைவி மற்றும் மகனுடன் வருகை தந்த ஸ்டாலின் , கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு சிலி நிமிடங்கள் அங்கேயே கலைஞரின் அருகில் அமர்ந்திருக்கிறார். பகலில் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற அழகிரியை விட , கலைஞரின் அருகில்வந்து அமர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி இருக்கும் ஸ்டாலின் தான் கருணாநிதிக்கு அதிகம் நெருக்கமானவர் என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது ஸ்டாலினின் இந்த செயல்.