பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெல்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் மீது அடிப்படை ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இதுபோன்ற பொய்யான புகார்களை கூறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொய் புகார் கூறியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு பின் நடந்து முடிந்த தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி, அதில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை. வதந்தியை பரப்பி வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்