Asianet News TamilAsianet News Tamil

சென்னையில் டாஸ்மாக் கடை திறக்க ரவிக்குமார் எம்பி எதிர்ப்பு.!

சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மீண்டும் அங்கே கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கவே வழிசெய்யும். இந்தத் தவறான முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் ரவிகுமார் எம்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
 
Ravikumar MP opposes opening of Tasmac store in Chennai!
Author
Tamil Nadu, First Published Aug 17, 2020, 8:09 AM IST

சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மீண்டும் அங்கே கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கவே வழிசெய்யும். இந்தத் தவறான முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் ரவிகுமார் எம்பி கேட்டுக் கொண்டுள்ளார்.

Ravikumar MP opposes opening of Tasmac store in Chennai!

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து டாஸ்மாக் கடைகள் வரும் 18ம் தேதி முதல்  திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும், நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது கட்டாயம் என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது.

Ravikumar MP opposes opening of Tasmac store in Chennai!

இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விசிக கட்சியின் எம்பி ரவிகுமார் தனது டுவிட்டரில், "சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மீண்டும் அங்கே கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கவே வழிசெய்யும். இந்தத் தவறான முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறப்பதில் முழு ஆர்வம் காட்டிவருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயமே.!
 
Follow Us:
Download App:
  • android
  • ios