Asianet News TamilAsianet News Tamil

ரவீந்திரநாத்துக்கு மத்திய அரசில் புதிய பதவி... ஆதங்கப்பட்ட ஓ.பிஎஸ்... அள்ளிக்கொடுத்த மோடி-அமித்ஷா..!

அவரோடு இந்தப்பதவிக்கு திமுக எம்.பி., தயாநிதி மாறன், பேராசிரியர் செளகதா ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Raveendranath Tagore gets new post in Central Government
Author
Tamil Nadu, First Published Jul 29, 2021, 12:18 PM IST

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார். இவர் மத்திய அமைச்சரவையின் இடம் பெறுவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.Raveendranath Tagore gets new post in Central Government

சமீபத்தில் டெல்லி சென்ற ஓ.பி.எஸ் மோடி, அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது தனது மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஓபிஎஸ் மோடியிடம் வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Raveendranath Tagore gets new post in Central Government

இந்நிலையில், சென்னை தலைமை இடமாக கொண்டு மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் நிதி பரிபாலன குழு உறுப்பினராக ரவீந்திரநாத் குமாரை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. மூன்றாண்டு கால பதவிக்கு இரவீந்திரநாத்தை மத்திய அரசே நியமனம் செய்துள்ளது.  அவரோடு இந்தப்பதவிக்கு திமுக எம்.பி., தயாநிதி மாறன், பேராசிரியர் செளகதா ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios