Asianet News TamilAsianet News Tamil

இனி நியாய விலை கடைகள் மாலை 6 மணி வரை திறந்து இருக்கனும்.. அரசு போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு.

சென்னை புறநகர் பகுதிகளில், காலை 8.30மணி முதல் பிற்பகல் 12.30மணி வரையிலும், பிற்பகல் 3மணி முதல் மாலை 7மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9மணி முதல் பிற்பகல் 1மணி வரையிலும், பிற்பகல் 2மணி முதல் மாலை 6மணி வரையிலும் செயல்பட வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Ration Shops will be open till 6 pm now .. Strict order issued by the government.
Author
Chennai, First Published Mar 1, 2022, 12:39 PM IST

நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர, இதர பணி நாட்களில் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே நியாய விலைக் கடைகள் ஒவ்வொரு பணி நாட்களிலும் செயல்படும் வேலை நேரம் தொடர்பான விவரங்கள், 2018 மக்கள் சாசனத்தில் திருத்தங்கள் செய்து வெளியிடப்பட்டதாகவும், அதன்படி, நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Ration Shops will be open till 6 pm now .. Strict order issued by the government.

அதன்படி, சென்னை புறநகர் பகுதிகளில், காலை 8.30மணி முதல் பிற்பகல் 12.30மணி வரையிலும், பிற்பகல் 3மணி முதல் மாலை 7மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9மணி முதல் பிற்பகல் 1மணி வரையிலும், பிற்பகல் 2மணி முதல் மாலை 6மணி வரையிலும் செயல்பட வேலை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் பெரும்பாலன நியாய விலைக் கடைகளில் பின்பற்றப்படுவதில்லை என்றும், மாதாந்திர நியாய விலைக் கடை பணியாளர்களுக்கான ஆய்வு கூட்டத்தில், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்து தெரிவித்து, குறித்த நேரத்தில் நியாய விலைக் கடைகளை திறந்து செயல்படுத்த உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும் என்வும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Ration Shops will be open till 6 pm now .. Strict order issued by the government.

அனைத்து நியாய விலைக் கடைகளிலும், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்த விவரத்தை குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வண்ணம் நியாய விலைக் கடையின் தகவல் பலகையில் காட்சிபடுத்த வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட மாவட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் துணை ஆணையாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து, குறித்த நேரத்தில் நியாய விலைக் கடைகள் திறந்து செயல்படுதகிறதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios