Ramasamy said Sasikala gave me the gift of God
நாடாளுமன்றத்தின் மைய்ய கட்டிடத்தில் நின்று தமிழ் பெண்களின் தைரியத்தை திணறத் திணற டெமோ போட்டுக் காண்பித்தவர் அ.தி.மு.க.வின் சசிகலா புஷ்பா எம்.பி.! மறக்க முடியுமா மக்கழே....’தமிழக முதல்வர் ஜெயலலிதா என்னை பெண்ணென்றும் பாராமல் அடித்துவிட்டார்’ என்று கண்ணீர்ர்ர்ர் வடித்த காட்சிதான் அது. ஜெ., கட்சிக்குள் இருந்து கொண்டே ஜெ மீது புகார் அதிலும் டெல்லிக்கே போய் சொல்லியதெல்லாம் உங்க வூட்டு, எங்க வூட்டு தைரியமா?
பரபரப்புக்கு பஞ்சமில்லாத பெண்மணி. கனிமொழியுடன் நட்பில் இருக்கிறார்! என்று இவரைப் பற்றி கொளுந்துவிட்டு எரிந்தது ஒரு தகவல். தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா காலங்காலமாக சேர்த்து வைத்திருந்த தனிப்பெரும் மானம் இவருடனான பர்ஷன்ல் புகைப்படங்களின் மூலம் பஸ்பமாகியது.
ஜெ., மரணத்துக்கு பின் சில மாதங்கள் கழித்து ‘நானே அ.தி.மு.க.வை வழிநடத்த தகுதியான தலைவி’ என்று தடாலடி செய்தார், பிறகு தினகரன் கோஷ்டியில் இணைந்தார். இப்படி பல வகையான பராக்கிரமங்களுக்கு சொந்தக்காரரான புஷ்பா கடந்த சில வாரங்களுக்கு முன் ராமசாமி எனும் வழக்கறிஞரை திடீர் திருமணம் செய்தார். அரசியல் மற்றும் அ.தி.மு.க.வின் உள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், கெக்கேபிக்கேக்களையும் ஏற்படுத்திய நிகழ்வு இது. அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் சிலர் இந்த ராமசாமியை ‘தியாகி ராமசாமி’ என்று பட்டம் கொடுத்து அழைத்தனர், சிரித்தனர்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சசிகலா புஷ்பா மற்றும் ராமசாமி இருவருக்கும் இது முதல் திருமணமல்ல. அந்த கதைகளை தோண்டினால் மண்வெட்டியின் முனை மழுங்கிடும். விட்டுவிடலாம்.
இந்நிலையில் ராமசாமியின் மனைவி சத்யபிரியா, சசிகலா உடனனான தன் கணவரின் திருமணத்தை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றுள்ளார். தன் கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக மீடியாவிடம் பிரியா புலம்பிக்கொட்டிக் கொண்டும் இருக்கிறார் தொடர்ந்து.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் அதிகம் வாய் திறக்காத ராமசாமி தற்போது திடீரென ஒரு உருகல், மருகல் ஸ்டேட்மெண்டை போட்டுத் தாக்கியிருக்கிறார்...
“சத்யபிரியாவுக்கும் எனக்கும் 2014 டிசம்பர்ல கல்யாணம் நடந்துச்சு. வெறும் நாலு மாசம்தான் என்னோட வாழ்ந்தாங்க. அப்புறமா அவங்கம்மா வீட்டுக்கு போயிட்டாங்க.

நான் என்ன போன்ல குடும்பம் நடத்துறதுக்காக அவங்களை கல்யாணம் பண்ணினேன்? எனக்கு யாரு சோறு பொங்கிப் போடுறது, மாற்றுத் திறனாளியான என் குழந்தையை யார் பார்த்துக்கிறது? அப்படின்னு அவங்களுக்கு எந்த கவலையுமில்லை. இதையெல்லாம் தாண்டி இன்னொன்னு, சத்யபிரியா என்னை கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி ஏற்கனவே இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்காங்க. அந்தாளு பேரு பழனிசாமி. அவங்க கல்யாண போட்டோ கூட என்கிட்ட இருக்குது. அவங்க முதல்லேயே ஒரு கல்யாணம் செஞ்சதும் உண்மை, அதை ரத்து செய்து நான் தீர்ப்பு வாங்கியதும் உண்மைங்க.
பணத்துக்காக சத்யபிரியா என்னை படுத்தியெடுக்கிறாங்க. அவங்க தம்பி பிஸ்னஸ் ஆரம்பிக்கிறதுக்கெல்லாம் நான் லட்சக்கணக்குல பணம் கொடுத்திருக்கேன். எங்க திருமணத்தன்னைக்கு சத்யபிரியாவே என் கிட்ட ஐம்பது லட்சம் பணம் வாங்கினா. இதுக்கெல்லாம் என்கிட்ட தெளிவான. ஆதாரம் இருக்குது. சத்யபிரியாவின் மோசமான செயல்கள் பத்தி இன்னும் சொல்ல நிறைய ஆதாரமிருக்குது.
இப்படியெல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த என் வாழ்க்கையில நிம்மதி வந்திருக்கிறது சசிகலா புஷ்பா மூலமாதான். என்னையும், என் குழந்தையையும் ரொம்ம்ம்ப்ப்ப்ப நல்லா பார்த்துக்கிறாங்க. சிம்பிளா சொல்றதுன்னா, சசி எனக்கு கடவுளா கொடுத்த கிஃப்டுங்க, வரம்-ங்க.” என்று உருகியிருக்கிறார்.
சர்தான்!
