நடிகரும்,அரசியல் பிரமுகருமான ஜெ.கே.ரித்தீஷின் மரண செய்தி சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது. மறைந்த ஜெ.கே ரித்திஷ் பற்றி அந்த சில குறிப்புகள்.

தமிழ் சினிமாவில், கம்பீரத் தோற்றமும், மிரட்டலான முறுக்கு மீசையுடன்  மாஸ் என்ட்ரி கொடுத்தவர் ஜெ.கே.ரித்திஷ். 

ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர்.  

இவர் நடித்த கானல்நீர், நாயகன் படங்களின் மூலம் தன்னை அடையாளப்படுத்தி கொள்ள எத்தனையோ விதமான விளம்பரங்களை செய்து கொண்டாலும், கணக்குப் பார்க்காமல் வாரி வழங்கும் வள்ளல் என பெயரெடுத்தவர். 

கோடம்பாக்கத்தின் கொடைவள்ளல் என்று கூட இவரை சொல்வார்கள். அதேபோல அரசியலிலும் இவர் கால் வைத்தார். 

2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம்  தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். 

பதவியேற்பின்போது ரித்திஷின் நடை,உடை, தோற்றத்தை பார்த்து ப.சிதம்பரத்திடம் சோனியாகாந்தி விசாரித்ததாகவும், ப.சிதம்பரம் இவரைப்பற்றி சொன்னதாக தகவல் வெளியாகின.   

திமுக காலத்தில் ராமநாதபுரம் எம்பியாகவும் வளர்ந்தார் ரித்தீஷ், அதன் பிறகு திமுக வில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளராக செயல்பட்டவர்.

2014ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். சென்னை போயஸ் கார்டனில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் அவர் இணைந்தார். 

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் ரித்திஷ். 

முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் பினாமியாக இருந்தபோது கொடுத்த பணத்தை வைத்துக்கொண்டுதான் இப்படி தாறுமாறாக செலவழிக்கிறார் என்று தகவல்கள் கசிந்தது. 

கடந்த 2016-ம் ஆண்டிலேயே ரித்தீஷூக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். 

ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இதயத்தில் கோளாறு இருப்பதை கண்டறிந்தனர்.  

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று,  ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.  ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரித்தீஷ் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ரித்தீஷ் மரண செய்தி சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.